- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

உள்ளத்தில் நல்ல உள்ளம் – போலீசாருக்கு குளிர்பானம் கொடுத்த ஏழை பெண்
ஆந்திராவில் ஊரடங்கால் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு ஏழை பெண் ஒருவர் குளிர்பானம் வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவு தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவிற்கான பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுக்குள் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மே 3 வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு பணியில் நோய் தொற்று பாதிக்காமல் இருக்க , மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழைப் பெண் ஒருவர் , மாத சம்பளம் ரூ.3000 மட்டுமே பெறும் அவர், ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரின் களைப்பினை போக்குவதற்கு அவர் இளைப்பாற குளிர்பானம் வாங்கி கொடுத்துள்ளார். இது குறித்து அந்த பெண் கூறுகையில், எனது வருமானம் 3000 ரூபாய் தான். ஆனால் அதை விட நம்மை பாதுகாக்கும் பணியை செய்யும் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்தேன் என கூறினார். அந்த பெண்ணின் செயல் காண்போரை மட்டுமின்றி போலீசாரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, இதற்காக அனைத்து போலீசாரும் அந்த பெண்ணை பாராட்டினர். இந்த சம்பவத்தை முன்னாள் மாநில முதல்வரான சந்திரபாபு நாயுடுவின் மகன் பாராட்டி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு ஊரடங்கு நேரங்களில் மனிதநேயத்தை நிரூபிக்கும் பதிவாக மீண்டும் அமைந்தது. அந்த பெண்ணின் விலைமதிப்பில்லாத உதவியை உண்மையிலேயே பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.