- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

உலகம் செய்தி பின்னாடி தோனி இருந்தால்… வீரர்களுக்கு ஐ.சி.சி., எச்சரிக்கை
துபாய்: இந்திய அணியின் ‘சீனியர்’ விக்கெட் கீப்பர், முன்னாள் கேப்டன் தோனி, 37. சிறந்த ‘பினிஷர்’ என்று பெயர் பெற்றவர். தவிர விக்கெட் கீப்பிங் பணியிலும் கலக்கி வருகிறார். மின்னல் வேகத்தில், கண் சிமிட்டும் நேரத்துக்குள் ‘ஸ்டம்பிங்’ செய்வதில் வல்லவர்.
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஜிம்மி நீஷம் பேட்டிங் செய்த போது ஜாதவ் பந்தை எதிர்கொண்டார். பந்து நீஷம் கால் ‘பேடில்’ பட்டுச் செல்ல ‘எல்.பி.டபிள்யு.,’ கேட்டு சகால் உள்ளிட்ட எல்லோரும் அப்பீல் செய்தனர்.
இதற்கு அம்பயர் மறுக்க நீஷம் கிரீசை விட்டு வெளியே சென்றார். அந்த நேரத்தில் மாற்றி யோசித்த தோனி, உடனடியாக பந்தை பிடித்து ரன் அவுட் செய்து அசத்தினார். நீஷம் சோகத்துடன் வெளியேறினார். தோனியின் இந்த செயல்பாட்டுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இதனிடையே தோனி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ‘டுவிட்டர்’ இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில், ‘தோனி விக்கெட் கீப்பராக நிற்கும் போது, பேட்ஸ்மேன்கள் எந்த காரணத்திற்காகவும் கிரீசை விட்டு வெளியே வர வேண்டாம். கவனமாக இருக்க வேண்டும்,’ என எச்சரித்துள்ளது.