- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

உலகம் செய்தி பழிவாங்கும் அரசியலை ஒதுக்குவோம் : டிரம்ப்
வாஷிங்டன் : அமெரிக்க கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பழிவாங்கும் அரசியலை ஒதுக்க வேண்டும் என எம்.பி.,க்களிடம் கேட்டுக் கொண்டார்.
தலைநகர் வாஷிங்டனில் நடந்த அமெரிக்க கூட்டுக் குழு கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர், பழிவாங்குவது, எதிர்ப்பது, தண்டனை வழங்குவது போன்ற அரசியலை தவிர்த்து ஒத்துழைப்பு, சமரசம் மற்றும் பொதுநலன் அடிப்படையிலான அரசியலே சாத்தியப்படக் கூடியது. சட்டவிரோத குடியேற்றம், கொடூர தாக்குதல்கள், போதைப் பொருள் விற்பனை, மனித கடத்தல்கள் ஆகியன அமெரிக்காவில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் இது.
கடந்த காலங்களில், மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவாக இந்த சபையில் பெரும்பாலானவர்கள் ஓட்டளித்த போதிலும் இதுவரை முறையான சுவர் கட்டப்படவில்லை. நான் அதை கட்டுவேன். வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான எனது உறவு நன்றாக உள்ளதால் பல பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் வியட்நாமில் மீண்டும் சந்திக்க உள்ளோம்.
பல ஆண்டுகளாக நமது தொழில்துறைகள், அறிவுசார் சொத்துக்கள், அமெரிக்க வேலைவாய்ப்புக்கள் மற்றும் வளங்களை குறிவைத்து சீனா நடத்தி வந்த திருட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன் என்றார்.