உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலகமாநாடுஆகஸ்ட் 5ம் 6ம் திகதிகளில் யாழ்பபாணபல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ளது

உலகத் தமிழ் பண்பாட்டு இயகத்தின் செயலாளர் நாயகம்” தமிழச் செம்மல்” ஜேர்மனிவாழ் துரை கணேசலிங்கம் அவர்களின் துரித முயற்சியாலும் அபாரமான துணிச்சலாலும் யாழ்பபாண பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக  பண்பாட்டு மாநாடு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் கோலாகலமாகநடைபெறவுள்ளது.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாட்டின் மாநாட்டுத் தலைவராக தமிழ் நாட்டைச் சேர்ந்த முனைவர் பாஞ் இராமலிங்கம் அவர்களை இயக்கத்தின் பொதுக்குழு தெரிவு செய்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி 13வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டில் வடக்கு மாகாணமுதலமைச்சர் மாண்புமிகு சி. வி. விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டிலிருநது திருதொல். திருமாவளவன் உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் உலகெங்கும் சுமார் 20 நாடுகளில் கிளைகளை அமைத்து சிறப்பாக இயங்கி வருகின்றது. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக ” தமிழச் செம்மல்” ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்கள் இயக்கத்தின் செயலாளர் நாயகமாக தொடர்ச்சியாக இயங்கி வருகின்றார். அவரது பணிகள்தொ டர கனடா  உதயன் நிறவனம் மற்றும் அவரது நண்பர்கள் வாழ்த்துகினறார்கள்