உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை நிறுவிய குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் நினைவு தினம்

1974ம் ஆண்டு, இன்றிலிருந்து 43 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தை நிறுவிய குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் நினைவு தினம் எதிர்வரும் யுலை 8ம் திகதி கனடாவின் ஸ்காபுறொ நகரில் நகரசபை மண்டபத்தில் (150 Borough Drive)அனுஸ்டிக்கப்படவுள்ளது.
ஆவணஞானி என்ற பட்டத்திற்குரியவரான இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் நேரடியாக பாராட்டுத் தெரிவித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு நடைபெறவுள்ள இந்த நேரத்தில் கனடாவில் அமரர் குரும்பசிட்டி இரா கனகரத்தினம் அவர்களை நினைவு கூருவது மிகப் பொருத்தமானதும் பெருமைக்குரியதுமாகும்