- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்
உலகெங்கும் பல நாடுகளில் கிளைகளை அமைத்து தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் ஆற்றி வருகின்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும் என இயக்கத்தின் அகிலத் தலைவர் கனடா வாழ் வி. துரைராஜா மற்றும் இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளவென ஐரோப்பிய நாடுகள் வட அமெரிக்க நாடுகள் அவுஸ்த்திரேலியா, ஸ்கென்நேவியன் நாடுகள், தென்னாபிரிக்கா பர்மா, மொறிசியஸ் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் அந்தமான், போன்ற நாடுகளிலிருந்து அறிஞர்களும் வர்த்தகப் பிரமுகர்களும் கலை இலக்கியவாதிகளும் பத்திரிகையாளர்களும் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்கள். ஊலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளையும் கனடாவில் இயங்;கும் தலைமையகமும் இணைந்து மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. மேலதிக விபரங்களுக்கு Imtc1974@yahoo.com அல்லது raja@cfsginc.com ஆகிய மின்னஞ்சல் விலாசங்களோடு தொடர்பு கொள்ளவும்