- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

உயிரிழந்த சிறுமிகள் உடலுக்கு தமிழிசை அஞ்சலி: உயிரிழப்பு ஏற்படாமல் இனியாவது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகோள்
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகள் பாவனா, யுவஸ்ரீ உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மழைக்காக, வறட்சியை தீர்க்க தண்ணீர் வராதா என்று ஏங்கினோம். இன்று மழை வந்தாலும் இது போன்ற துயரங்கள் இரண்டு குழந்தைகளை இழந்து வாடும் மீளா துயரம் ஏற்பட்டிருக்கிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
மழைநீர் எங்கும் தேங்கவில்லை என்று கூறுகிறார்களே?
தண்ணீர் தேங்கவில்லை என்பது எல்லா இடங்களிலும் இல்லை, வேலை நடந்துள்ளது. அதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. தண்ணீர் தேங்கவில்லை என்பது மட்டுமே தீர்வாகாது.
இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உயிரிழப்பை தடுக்க வேண்டும். தண்ணீர் தேங்காமல் இருப்பதா உயிரிழப்பா என்றால் உயிரிழப்பு நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தற்போது மழை குறைந்துள்ள சூழ்நிலையில் உடனடியாக எங்கெல்லாம் இது போன்ற பிரச்சனைகள் உள்ளது என்பதை கண்டறித்து நீக்க வேண்டும்.
தமிழகத்தில் லஞ்ச ஊழல் பெருகி விட்டது
மெர்சல் பட விவகாரத்தில் காட்டிய அழுத்தத்தை தமிழகத்தில் லஞ்ச ஊழல் விவகாரத்தில் பாஜக காட்டுமா?
இந்த கேள்வியே தவறு, பிரச்சனையை திசை திருப்ப வேண்டாம்
இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.