- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

உயர்திரு.வி.கையிலாசபிள்ளை அவர்கள் இன்று கொழும்பில் காலமானார்
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் முன்னாள் தலைவரும், இலங்கை மனிதநேய அமைப்பின் தலைவரும், திருக்கேதீஸ்வரம் அறங்காவலர் சபையின் தலைவருமாகிய உயர்திரு .வி.கையிலாசபிள்ளை அவர்கள் இன்று கொழும்பில் காலமான செய்தியறிந்து மிகவும் கவலையடைகிறோம். மிக இக்கட்டான கால கட்டத்தில் இந்து மாமன்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அல்லும் பகலும் அயராது பணியாற்றிய பெருந்தகை. கொழும்பில் வறுமையில் வாடிய சைவச்சிறார்களுக்கு சக்தி இல்லத்தை தோற்றுவித்து அப்பிள்ளைகளின் வாழ்வுக்குப் பேராதரவு நல்கியவர்.மனித நேய அமைப்பு ஊடாக நூற்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவி வருபவர். வன்னிப் பெரு நிலப்பரப்பில் உள்ள சிறுவர் இல்லங்கள், ஆதரவற்ற குடும்பங்களுக்கு பல வகையில் உதவிய மகத்தான மனிதத்தை நாம் இழந்து விட்டோம். ஈடு செய்ய முடியாத தொண்டரின் பிரிவு மறக்க முடியாதது. திருக்கேதீஸ்வரம் இந்திய அரசின் உதவியுடன் கருங்கற்கோவிலாக இன்று உருவாக வித்திட்டவர். யாழ் இந்துக்கல்லூரி, யாழ் இந்து மகளிர்கல்லூரி , அராலி சரஸ்வதி வித்தியாலயம், சிவபூமி பாடசாலை, சிவபூமி மடம் போன்ற பல்வேறு இந்துப் பாடசாலைகளுக்கும் சமய நிறுவனங்களுக்கும் அறக்கட்டளைகளை நிறுவி பேருதவி புரிந் பெருந்தகையின் ஆத்மா சாந்தி பெற, சைவ மக்கள் பிராத்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
தகவல்:-
ஆறு.திருமுருகன்
தலைவர்
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்
தெல்லிப்பழை.