உண்மையைச் சொல்லி வாக்குக் கேளுங்கள்.மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இதுவே வேட்பாளர்களிடம் நாம் கேட்பது. யாழ்ப்பாண தினசரி “வலம்புரி” வலியுறுத்துகின்றது

வடக்கிலும் கிழக்கிலும் உள்ராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “வலம்புரி” தினசரிப் பத்திரிகை நேற்று முன்தினம் எழுதிய ஆசிரிய தலையங்கத்தை எமது கனடா உதயன் தாங்கி வருவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

மேற்படி “வலம்புரி” ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
உள்ளூராட்சிசபைத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ஊர் ஊராகநடைபெறும் இத்தேர்தல் பிரசாரத்தில் பலரும் களமிறங்கியுள்ளதைஅவதானிக்க முடிகின்றது.

பொதுவில் உள்ளூராட்சிசபைத் தேர்தலிலில் கட்சி என்பதற்கு அப்பால்இதேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் யார் என்பதுதான் முதன்மை பெறும்.
என் ஊரவர், என் உறவினர் ,தெரிந்தவர், உதவி செய்யக்கூடியவர் என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அதன் வழி வாக்களிக்கின்ற நடை முறையே மேலோங்கி இருக்கும்.

இவை ஒரு புறமிருக்க, தேர்தல் பிரசாரத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மக்களுக்கு உண் மையைச் சொல்ல வேண்டும் என்பதுதான் நம் தாழ்மையான கோரிக்கை.

ஏனெனில் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் உண்மையைச் சொல்ல மறுத்ததால்தான் எங்கள் மக்கள் பேரிழப்பைச் சந்தித்திருந்தனர்.

குறிப்பாக, வன்னிப் பெரு நிலப்பரப்பில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோது விடுதலைப் புலிப் போராளிகள் கொன்றொழிக்கப் பட்டதாகவே இலங்கை அரசின் பிரசாரம் இருந்தது.

இவ்வாறாக இலங்கைஆட்சியாளர்கள் தமிழினம் என்ற ஒரே காரணத்துக்காக சர்வதேசத்தின் மத்தியில் பொய்ப்புரைத்தது.

போருக்குப் பின்பும் காணாமல்போனவர்கள் தொடர்பில், உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பில், படையினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பில், முழுப்பொய்ப்புரைப்பதைக் காணமுடியும்.

இலங்கை அரசாங்கம் உண்மையைச் சொல்லுமாக இருந்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதும் போர்க்குற்ற விசாரணை என்பதும் மிகச் சுலபமாகிவிடும்.

ஆக, தமிழினத்துக்கு எதிராக இலங்கை ஆட்சியாளர்கள் பொய்ப்புரைப்பதன் காரணமாகவே இன்றுவரை தமிழினம் பெரும் துன் பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்து வருகிறது.
அதே வேளை இதற்கு எதிராகத் தமிழ் மக்கள் போராடவேண்டியும் உள்ளது. இந்நிலையில் நாமே நம் இனத்துக்கு பொய்ப்புரைப் போமாக இருந்தால், எங்கள் மக்களின் எதிர் காலம் என்பது சூனியமாகிவிடும்.

எனவே யார் எந்தக் கட்சியில் நின்றுதேர்தலில் போட்டியிட்டாலும் பரவாயில்லை. எங்கள் மக்களிடம் பொய்யுரைக்காதீர்கள்.உங்கள் கட்சி சார்ந்தவர்கள் தமிழினத்துக்கு எதிராகச் செயற்பட்டால், அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் செய்வது தவறு என்பதை வெளிப்படையாகப் பேசுங்கள்.மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவேண் டும் என்பதற்காகபிழையைச் சரி என்றும் அதர்மத்தைத் தர்மம் என்றும் வாதிட்டுவிடாதீர்கள். பதவியும் பட்டமும் ஏன்? மனித வாழ்வும் சொற்ப காலத்துக்குரியவை.

உண்மையும் நேர்மையும் தர்மமுமே இந்தஉலகில் நிலைத்துநிற்கக் கூடியவை.ஆகையால், வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால், உண்மையைச் சொல்லிவாக்குக் கேளுங்கள்.மக்கள் தீர்ப்பைஏற்றுக் கொள்ளுங்கள். இதுவே வேட்பாளர்களிடம் நாம் கேட்பது.

பொங்கல் தினத்தன்று வவுனியாவில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களை பார்த்து “திட்டுக்கள்” வழங்கிய தாய்மார்கள்;

தாயகத்தில் கையளித்தும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டஉறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 324 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் பொங்கல் தினத்தன்று இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பாராளுமன்றஉறுப்பினர்களின் படங்கள் பொறிக்கப்பட்டபதாகைக்குமுன்பாககதறியழுதகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர்களின் படங்களைகாட்டி இவர்கள் துரோகிகள் எனவும் கதறியழுதுமண்ணால் தூவியிருந்தனர்.

இதேவேளை பதாகையில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களுக்குஅடித்தும் அதற்கு முன்பாக இருந்து ஒப்பாரி வைத்த தாய்மார் இவர்களாலேயே தமது பிள்ளைகள் வெளிவராமல் உள்ளனர் எனவும் தெரிவித்ததுடன் ஜனாதிபதியின் சந்திப்பின்போது சுமந்திரன் எம்.பி குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும்,சுமந்திரன் ஒரு துரோகி எனவும் தெரிவித்து கதறியழுததுடன் பல தாய்மார் மயக்க முற்றும் வீழ்ந்தனர்.

இந் நிலையில் அன்றைய தினம் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்ட நிலையில் தமது பிள்ளைகள் வருவார்களா என்ற ஏக்கத்தினையும் வெளியிட்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.