- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

உடல் நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ராஜினாமா
உடல் நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, 65, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
கிழக்காசிய நாடான ஜப்பானில், நீண்ட காலம் பிரதமராக பதவி வகிக்கும் பெருமை உடையவர் ஷின்சோ அபே, 65. அபே, இளம் வயதிலிருந்தே வயிறு தொடர்பான உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக, அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், இரண்டு முறை மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை பெறும் அளவுக்கு, அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.
இதுபோன்ற சூழலில், பிரதமர் பொறுப்பை கவனமாக கையாள முடியாது என்பதால், பதவியை ராஜினாமா செய்ய, அபே முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. அபேயின் பதவிக் காலம், அடுத்தாண்டு செப்டம்பரில் முடிவடையஉள்ளது. ஆனாலும், உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் பதவியை தொடர, அவர் விரும்பவில்லை என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.