- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அதிகாரப்பூர்வ நகலை தற்போது வரை சசிகலா தரப்பினர் பெறவில்லை என தகவல்
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அதிகாரப்பூர்வ நகலை தற்போது வரை சசிகலா தரப்பினர் பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் வழக்கில் தொடர்புடைய அனைவரும் குற்றவாளிகள் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் ஆஜராக வேண்டும் என கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 48-ல் மூவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அதிகாரப்பூர்வ நகல் தற்போது வரை சசிகலா தரப்பினர் பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை அதிகாரப்பூர்வ நகல் வழங்கப்படும் என தெரிகிறது. இதன்பிறகே சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகள் சரண் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.