- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

ஈ.வெ.ரா. ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன – மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி
சேலத்தில் ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன என்று துக்ளக் விழாவில் நடிகர் ரஜினி பேசி இருந்தார். இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது இல்லாத ஒன்றை நான் சொல்லவில்லை, உண்மையை தான் பேசினேன். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் உறுதியாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த, ‘துக்ளக்’ வார இதழ் விழாவில், நடிகர் ரஜினிகாந்த், தி.மு.க.,வின் ‘முரசொலி’ நாளிதழ் மற்றும் ஈ.வெ.ரா., குறித்து கருத்து தெரிவித்திருந்தார். 1971ல் சேலத்தில் ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலத்தில் ராமர், சீதை சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர் என்று அப்போது ரஜினி பேசினார்.
இதற்கு, தி.மு.க.,வினர் உட்பட, பல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ‘சேலம் ஊர்வலத்தில் கடவுள்களின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்படவில்லை. தன் பேச்சுக்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும்; மறுத்தால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம். ரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள, தர்பார் படத்தை ஓட விட மாட்டோம். அந்த படம் ஓடும் தியேட்டர்கள் முன், போராட்டம் நடத்துவோம்’ என, அவர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். ரஜினி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி. அவர் பேசுகையில், துக்ளக் விழாவில் நான் பேசியது சர்ச்சையாகி உள்ளது. நான் இல்லாத விஷயத்தை சொன்னதாக சொல்கிறார்கள். இந்து கடவுள்கள் குறித்து அப்போது சேலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளது. இல்லாத விஷயத்தை நான் சொல்லவில்லை. நான் கேள்விப்பட்டதை, பத்திரிகைகளில் வெளியானாதை பேசினேன். உண்மையை தான் பேசி உள்ளேன், ஆகையால் யாரிடமும் மன்னிப்பு, வருத்தம் கேட்க முடியாது. 1971ல் நிகழ்ந்த விஷயம், மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.