ஈராக்கில் 3 ஆயிரம் பேருக்கு தூக்கு ஐ.எஸ்., ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை

ஈராக்கில் தீவிரவாத குற்றங்கள் அல்லது ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

சிரியாவில் வன்முறையில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள், ஈராக்கிலும் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி நிலவரப்பட்டி, ஈராக்கில் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ள 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களில் 3 ஆயிரம் பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஆயிரம் பேருக்கு மேல் போலீஸ், ராணுவம், குர்து படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகம் பேரை சிறை வைப்பதும், குற்றவாளி என விரைவாக முடிவு செய்வதும், தவறான தீர்ப்புகளுக்கு இடமளிப்பதுடன், சிறையில் தீவிரவாதிகள் தங்களுக்குள் மீண்டும் ஓர் அமைப்பை உருவாக்கலாம், என்ற அச்சமும் எழுந்துள்ளது.