ஈபிள் டவர் ஜூன் 25ல் மீண்டும் திறப்பு !!

உலகப் புகழ்பெற்ற பிரான்சின் ஈபிள் டவர் மூன்று மாதங்களுக்குப்பிறகு வரும் ஜூன் 25ம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல்படுத்தின. ஊரடங்கு காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் மார்ச் 13ல் மூடப்பட்டது. தற்போது பிரான்சில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா தளங்கள், நினைவுச் சின்னங்களும் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உலகப்புகழ்பெற்ற ஈபிள் டவர் ஜூன் 25ம் தேதி, நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் முதல் தளம் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 11 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம். படிக்கட்டு வழியே மட்டுமே ஏற வேண்டும். ஏறவும், இறங்கவும் தனித்தனியே வழிவகை செய்யப்பட்டுள்ளது.