- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை
முதல்வர் பழனிசாமி – துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியது.
பிரமாண பத்திரங்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள் ஆதரவு அடிப்படையில் முதல்வர் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. கட்சிக் கொடி, அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றை முதல்வர் தரப்பு பயன்படுத்தி கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.
நீண்டகாலம் இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தினகரன் அணியில் தற்போது அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆர்கே நகர் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சின்னம் கிடைக்காதது, சசிகலா, தினகரன் தரப்பினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
* மொத்தம் 2128 பொதுக்குழு உறுப்பினர்களில் , 1,741 பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த பிரமாணப்பத்திரம் ஏற்கப்பட்டது.
* தினகரன் தரப்பில் தாக்கலான 1280 , பிரமாணப்பத்திரங்களில் 168 பத்திரங்கள் மட்டுமே ஏற்கப்பட்டது.
* கட்சியின் பொதுக்குழுவே தொண்டர்களின் பிரதிபலிப்பாக கொள்ள முடியும்.
* தினகரன் அணிக்கு 20 , பழனிசாமிக்கு 111 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவாக உள்ளனர்.
* அமைப்பு ரீதியாகவும், சட்டப்பேரவையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு உள்ளது.
* லோக்சபாவில் 34 எம்.பி.,க்களும், தினகரன் அணிக்கு 3 எம்.பி.,க்களும் ஆதரவாக உள்ளனர்.
* ராஜ்யசபாவில் முதல்வர் அணிக்கு 8 எம்.பி.,க்களும், தினகரன் அணிக்கு 3 எம்.பி.,க்களும், ஆதரவாக உள்ளனர்.
* மார்ச் 22 ம் தேதி இரட்டை இலையை முடக்கிய கமிஷன் உத்தரவு வாபஸ்
* அ.தி.மு.க., என்ற பெயரை அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான அணியினர் பயன்படுத்தலாம்.
* அ.தி.மு.க., கட்சி , கொடி, அலுவலகம் அனைத்தும் பழனிசாமி தரப்பினருக்கே சொந்தம்
* அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லாத தீபா உரிமை கோர முடியாது