இஸ்லாமியர் ஒருவரை இந்து மதத்துறை அமைச்சராக நியமித்தது, இரண்டு சமூகத்தினரையும் பகைமூட்டி வேடிக்கை பார்ப்பதற்காகவே!

இஸ்லாமியர் ஒருவரை இந்து மதத்துறை அமைச்சராக நியமித்ததுஇரண்டு சமூகத்தினரையும் பகைமூட்டி வேடிக்கை பார்ப்பதற்கான செயற்பாடாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.பிறப்பால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயம் சார்ந்தவர்களாக உள்ளனர். அரசியலுக்கு அப்பால் அவர்களின் மொழியும் சமயமும் பிறப்பால் உரித்தானதாக அமைந்து விடுகின்றது. இதனை எவராலும் மறுத்துரைக்க முடியாது.
இந்நிலையில் இந்துமதம் சாராத ஒருவரிடம் இந்து கலாசார பிரதி அமைச்சர் பதவியை வழங்குவது பொருத்தமில்லாத ஒன்று மட்டுமன்றி கண்டனத்திற்கும் விசனத்திற்கும் உரியது.

இரண்டு சமூகத்தினரையும் பகைமூட்டி வேடிக்கை பார்ப்பதற்கான செயற்பாடாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.
திரு.காதர் மஸ்தான் அவர்கள் பிறப்பால் தமிழ்மொழி பேசுபவராக இருந்தாலும் சமயவிவகாரங்கள் என்னும்போது அவர ;தனது சமய அனுஸ்டானங்களைப் பின்பற்றுபவராகவும் அதன் வழி நடப்பவராகவும் இருக்க வேண்டும் என்பது அவருடைய மார்க்கத்திற்கு உகந்தது.

ஆனால் அவரை, இந்து சமய கலாசார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக நியமனம் செய்தமை நியமனம் செய்தவர்களில் முதலாவது தவறு இருக்கின்றது. இரண்டாவது திரு.காதர் மஸ்தான் அவர்கள் அத்தகைய அமைச்சுப்பொறுப்பினை ஏற்றிருப்பது மிகத் தவறானது.

ஆகையால் இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு திரு.காதர்மஸ்தான் அவர்கள் அவ்வமைச்சுப் பொறுப்பினை இந்து மதம் சார்ந்த இன்னொருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் சமூக ஒற்றுமையைக் குலைக்கும் நோக்குடன் இதுபோன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளக்கூடாது எனவும் மேற்படி சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது