- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காசா இஸ்லாமிய ஜிஹாத் தளபதி கொல்லப்பட்டார்
சர்வதேச அளவில் ஆதரவு பெற்ற பாலஸ்தீனிய அதிகாரசபையிலிருந்து 2007ல் காசாவை வலுக்கட்டாயமாகக் ஹமாஸ் கைப்பற்றியதிலிருந்து, இஸ்ரேல் மற்றும் காசா போராளிகள் மூன்று போர்களை நடத்தினர். 2014ல் மூன்றாவது போர் 50 நாட்கள் நீடித்தது. இதனால் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது.
இதுபோல் அடிக்கடி வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது சுமார் 10 ஏவுகணைகள் வீசப்பட்டன. இதற்கு அபு எல்-அட்டா தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் மூத்த இஸ்லாமிய ஜிஹாத் ஈரானிய ஆதரவு தளபதி பஹா அபு எல்-அட்டா கொல்லப்பட்டார். வான்வழித் தாக்குதலில் ஒரு ஆணும் பெண்ணும் கொல்லப்பட்டதாகவும் மேலும் இரண்டு பேர் காயமடைந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு உள்ள தகவலில் தெஹ்ரானில் தெற்கு இஸ்ரேல் சமூகங்களுக்கு எதிராக சமீபத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அபு எல்-அட்டா தான் காரணம் . இதை தொடர்ந்து உடனடி தாக்குதல் நடத்தப்பட்டது.