இவர் ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வந்துள்ளாராம்… : கமலுக்கு எச்.ராஜா பதிலடி

கொல்கத்தா காவல்துறை ஆணையரைக் கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்ட விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தியது பற்றி மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தன் கருத்தைத் தெரிவித்ததற்கு தமிழக பாஜக தலைவர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

கமல்ஹாசன் கூறும்போது, “மம்தா பானர்ஜி தர்ணா போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. சுயமரியாதை உள்ள எந்த அரசும் இது போன்ற அழுத்தத்தை ஏற்றுக் கொள்ளாது” என்று கமல்ஹாசன் கூறியிருந்தார்.

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக எச்.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில், “இவர் ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வந்துள்ளாராம். நம்புவோம். சுயமரியாதைக்கும் தேசவிரோதத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்” என்று சாடியுள்ளார்.