- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

இலங்கை மஹர சிறைச்சாலை கைதிகள் மோதல்: 11 பேர் பலி&106 பேர் காயம்
மஹர சிறைச்சாலைக்குள் கடந்த 29ம் தேதி கடும் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது. இது தொடர்பான விடியோ ஒன்றை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 29ம் தேதி மாலை ஆரம்பமான மோதல் அடுத்த நாள் அதிகாலை வரை தொடர்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மோதல் சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், 106 கைதிகள் காயமடைந்திருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காயமடைந்த கைதிகளுக்கு ராகமை மருத்துவமனை, வெலிகட சிறைச்சாலை மருத்துவமனை மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனை ஆகியவற்றில் தொடர்ந்தும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிடுகிறது.
அத்துடன், சிறு காயங்களுக்கு உள்ளான கைதிகளை சிகிச்சைகளின் பின்னர், மீண்டும் மஹர சிறைச்சாலைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் கோவிட் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டு வருகின்ற பின்னணியில், மஹர சிறைச்சாலையில் கடந்த 29ம் தேதி 183 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதையடுத்து, சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்ததை அடுத்தே, அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்திருந்தார்.
சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.