இலங்கை பிரதமர் மகிந்தா ராஜ பக்ஷே பிப்.,7, 5 நாள் பயணமாக இந்தியா வருகை –

இலங்கையில் சமீபத்தில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மகிந்தாராஜபக்ஷே பின்னர் வரும் பிப்., 7 ம் தேதி முதல் 11 ம் தேதி வரையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற் கொள்ள உள்ளார்.

சுற்றுப்பயணத்தின் போது அவர் பல்வேறு தலைவர்களை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சாரநாத், புத்தகயா மற்றும் திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்ல உள்ளார்.

முன்னதாக இந்த (ஜனவரி) மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீனவர்களின் பிரச்னை குறித்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனேவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.