- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

இலங்கை தமிழர்கள் பற்றிய ஆல்பம் தயாரிக்கவுள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. தற்போது இவர் இசையையும் தாண்டி, தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தற்போது இவர் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பியர் பிரேமா காதல்’. இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை ரைசா ஆகியோர் ஹீரோ, ஹீரோயினியாக நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா, ஒரு ஆல்பம் தயாரித்து இசையமைக்கவுள்ளார். அது இலங்கை தமிழர் இனப்படுகொலை பற்றியதாம். அவ்வாறு வெளிவந்தால் அது அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுக்கும். விரைவில் இதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.