இலங்கை ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் வாஷிங்டனுக்கு மண்டியிட்டார்

உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் வீழ்ச்சியினால் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள போர் மேகங்கள் குவிகின்ற நிலையில்,கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூடியது. பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளுடன் சேர்த்து,இலங்கையும் பூகோள-அரசியல் பகைமைகளின் நீர்ச்சுழிக்குள்ளும் மற்றும் பெரும் வல்லரசுகளால்,குறிப்பாக அமெரிக்காவினால் மேலும் மேலும் உச்சரிக்கப்படும் இராணுவவாதத்தை நோக்கிய திருப்பத்துக்குள்ளும் இழுபட்டு சென்றுகொண்டிருக்கின்றது.

செப்டம்பர் 21 அன்று ஐ.நா.வில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை உட்பட,நியூ ஜோர்க்கில் அவரது முழு நடத்தையும்,அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அவரது மண்டியிடலை வெட்கமின்றி வெளிப்படுத்துகின்றது. ஐ.நா. பொது செயலாளர் பான் கி-மூன்,அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஏனையவர்களிடமிருந்தும் அவர் பெற்ற மதிப்புரைகள்,கடந்த வருடம் ஜனவரி மாதம் பதவிக்கு வந்ததில் இருந்தே,சிறிசேன கடமையுணர்வுடன் வாஷிங்டனின் பாதையில் பயணிக்கின்றார் என்ற உண்மையை சாதாரணமாக பிரதிபலிக்கின்றது.

சிறிசேன,கிளின்டன் பூகோள முனைப்பு அமைப்பின் கூட்டத்தொடரில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் சந்தித்தார். பின்னர் இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரியை சந்தித்தார். அப்போது,”அமெரிக்க அரசாங்கமானது இலங்கையின் புதிய அரசாங்கத்தின் பயணத் திசையை பாராட்டி போற்றுவதோடு,சாத்தியமான ஒவ்வொரு உதவியையும் நாட்டுக்கு வழங்குகிறதுஇ” என்று கெர்ரி அறிவித்தார். இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வலைத் தளத்தின் படி,“நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சிக்கு” சிறிசேனவின் “அப்பணிப்பை” செயலாளர் நாயகம் பான் பாராட்டினார்.

ஐ.நா. அரச தலைவர்கள் விருந்தில் ஜனாதிபதி ஒபாமா சிறிசேன உடன் பேசியவற்றை கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டிருந்தன. இலங்கை ஜனாதிபதி,பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடன் ஒரே மேசையில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சிறிசேனவை நோக்கி வந்த ஒபாமா,”தற்பொழுது இலங்கையில் நடைபெற்று வரும் சாதகமான மாற்றங்கள்,உலகத்துக்கு உதாரணமாகும். நாம் இலங்கை அபிவிருத்திக்கு ஜஎம்முடையஸ பூரண ஒத்துழைப்பை உறுதி செய்கிறோம்இ” என தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் கருத்துக்கள் ஷெரீப்பை வேண்டுமென்றே கீழே இறக்கும் இராஜதந்திரமாகவும் கூட முன் வைக்கப்பட்டன. பாக்கிஸ்தான்,அந்த நேரத்தில்,சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் ஒரு இராணுவ முகாமில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட ஒரு பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்,இந்தியாவுடன் வார்த்தை போரில் சிக்கிக் கொண்டிருந்தது. அதன் மூலோபாய பங்காளியான இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் முகமாக,ஒபாமா நிர்வாகமானது ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பை எதிர்த்து வரும் போராளி குழுக்கள் உட்பட அதன் மண்ணில் பயங்கரவாத நடவடிக்கைகள் தடுக்க எடுக்கும் நடவடிக்கை போதாது என்று பாக்கிஸ்தானை விமர்சிக்கின்றது.

இலங்கை ஏற்பட்ட மாற்றத்தின் “ஒரு முன்னுதாரணமாக” ஒபாமா பாராட்டுவது சாதாரணமானதே,ஏனெனில்,அதிகாரத்துக்கு வந்ததில் இருந்தே,சிறிசேன நாட்டின் வெளிநாட்டு கொள்கையை வாஷிங்டனை நோக்கி உறுதியாக திருப்பியுள்ளார். அது சீனாவிற்கு எதிரான மோதலுக்கான “ஆசியாவில் முன்னிலை” கொள்கையை உக்கிரப்படுத்துகின்ற நிலையில்,ஒபாமா நிர்வாகமானது பெய்ஜிங்குடன் நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு மேலும் மேலும் குரோதமானதாகியது.

சிறிசேன வாஷிங்டன் ஆதரவுடன் ஒரு ஆட்சி மாற்றத்துக்கு சமமான ஒன்றின் மூலம் 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை தோற்கடித்தார். கிளின்டனை அவர் சந்தித்தது தற்செயலானது அல்ல. இராஜபக்ஷவின் வீழ்ச்சியை திட்டமிட்டவர்களில் முக்கிய நபரான முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க,கிளின்டன் மன்றத்தின் மூலம் கிளின்டனுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளவராவார்.

சிறிசேன ஜனாதிபதி ஆன பின்னர்,ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.) பாராளுமன்றத்தில் சிறுபான்மையாக இருந்த போதிலும்,அவர் அமெரிக்க சார்பு ஐ.தே.க.யின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தன்னிச்சையாக பிரதமராக நியமித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னரே விக்கிரமசிங்கவின் கட்சியால் சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) உதவியுடன் ஒரு புதிய “ஐக்கிய அரசாங்கத்தை” அமைக்க முடிந்தது.

அனைத்து பகுதிகளில் இருந்தும் கிடைத்த இந்த பாராட்டுக்களுடன்,சிறிசேன ஐ.நா. பொதுச்சபையில் தன் சுருக்கமான உரையில் பிரதிபலித்தார். அவர் சிங்கள மொழியில் உரையாற்றியதுடன் அந்த உரை தேசியவாதத்தில் மூழ்கியதாயிருந்தது.

“நான் பதவிக்கு வருவதற்கு முன்னர்,என் நாட்டில் மக்கள் அச்சம் மற்றும் சந்தேகங்களுடன் வாழ்ந்து வந்தனர். என்னால் அந்த காலத்திற்கு முடிவு கட்டி,சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தி,இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளைப் மீண்டும் உறுதிப்படுத்தி அவர்கள் சுதந்திரமான மற்றும் ஜனநாயக சமூகத்தில் சந்தோஷமாக வாழ அஸ்திவாரமிட முடிந்ததுஇ” என சிறிசேன பிரகடனம் செய்தார்.

என்ன ஒரு தள்ளாட்டமான பாசாங்கு! சிறிசேன,2015 தேர்தலில் அவரை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னர்,இராஜபக்ஷ அரசாங்கத்தில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் கொடூரமான போரில் அதன் அட்டூழியங்களை நியாயப்படுத்துவதில் ஒரு விசுவாசமான சிரேஷ்ட அமைச்சராக இருந்தார். அவர் இராஜபக்ஷவுக்கு பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கூட ஒரு சந்தர்ப்பத்தில் இருந்து,இராணுவத்தின் குற்றங்களுக்கும் எந்தவொரு எதிர்ப்பையும் ஒடுக்குவதிலும் நேரடி,உடனடி பொறுப்பாளியாக இருந்துள்ளார்.

ஜனநாயகத்தின் மற்றும் சட்ட ஆட்சியின் மாதிரியாக தன்னை காட்டிக்கொண்ட சிறிசேன,பின்னர் தார்மீக நல்லொழுக்கங்களின் தேவை பற்றி உலகத்திற்கு ஒரு விரிவுரையுடன் தொடர்ந்தார். “உலகின் பல பகுதிகளில்,நாம் கோபம்,வெறுப்பு மற்றும் காட்டுமிராண்டித்தனத்தின் துரதிருஷ்டவசமான பெருக்கத்தை பார்க்கிறோம். நான் சமகால சமூகம் ஒழுக்க நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று நம்புகிறேன். நான் அனைத்து நாடுகளும் தார்மீக மதிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நம்புகிறேன்.”

இது ஆப்கானிஸ்தான்,ஈராக்,சிரியா,லிபியா மற்றும் பிற நாடுகளில் நடத்தும் போர்களில் மில்லியன் கணக்கானவர்களின் இறப்புக்கு காரணமான அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இலங்கை கூட்டுச் சேர்த்துக்கொண்டுள்ள ஒரு மனிதனிடம் இருந்து வருகிறது.

இலங்கையில் தற்போதைய நிலைமைக்கு திரும்பிய ஜனாதிபதி,”கடந்த 20 மாதங்களாக,ஜஅவர்ஸ நாட்டில் சமூக,அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்தின் ஒரு புதிய சகாப்தத்துக்கு தலைமை கொடுத்ததாக” என்று பெருமை அடித்துக் கொண்டார். இது ஒரு முழு பொய். உண்மையில் சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவின் கீழ் என்ன நடந்ததுள்ளது எனில்,ஏற்கனவே இருந்த கனமான கடன் சுமைக்கு மேல் மேலும் கடன் குவிந்து உள்ளது. இப்போது இந்த இரண்டு “ஜனநாயகவாதிகளும்”,பெருகிய முறையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான அழுத்தத்தின் கீழ் திணிக்கப்படும் கொடூரமான சிக்கன நடவடிக்கைகள் சம்பந்தமாக எதிர்ப்பு காட்டும் தொழிலாளர்கள்,விவசாயிகள் மற்றும் இளைஞர்களையும் அடக்குவதற்கு,போர் தசாப்தங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ் அரச இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இப்போது முன்னெடுக்கப்படும் நல்லிணக்க நடவடிக்கை” பற்றியும் புகழ்ந்து கொண்ட சிறிசேன,”இது நாடு மீண்டும் போர் மற்றும் பயங்கரவாத கொடுமையை சந்திக்காது என்பதற்கு உத்தரவாதமளிக்கும்இ” எனக் கூறினார். அமெரிக்க மற்றும் ஏனைய பிரதான வல்லரசுகளின் ஆதரவைப் பெற குறிவைத்த அவர்,”இந்த உயரிய நோக்கத்திற்காக,இலங்கையானது உலகத்தின் ஒத்துழைப்பு மற்றும் ஆசீர்வாதத்தை வரவேற்கிறதுஇ” என்று அறிவித்தார்.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்திய ஊக்கமளிக்கப்படும் நல்லிணக்கம் என்று அழைக்கப்படுவதற்கும்,தீவின் கொடூராமான இனவாத யுத்தத்தின் அடிப்படை காரணங்களைத் தீர்ப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அது தொழிலாள வர்க்கத்தை பரஸ்பரம் சுரண்டுவதற்காக நாட்டின் தமிழ் மற்றும் சிங்கள ஆளும் கும்பல்களுக்கு இடையிலான ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்குக்கான முயற்சியே தவிர வேறொன்றுமில்லை. இந்தியா குறிப்பாக தமிழ் வணிகங்கள் வழியாக இலங்கையில் பொருளாதார வாய்ப்புகளை திறந்துவிடுவதற்கும் மற்றும் இலங்கையிலான இனவாத அமைதியின்மை தென் இந்தியாவில் தமிழ் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதை தடுப்பதற்குமாக இரு நோக்கங்களைக் கொண்டுள்ளது.

சிறிசேனவை பொறுத்தவரையில்,”நல்லிணக்கம்” என்பது,வெறுமனே வாஷிங்டன் முன் தன்னுடைய மண்டியிடலை வெளிப்படுத்தவும் உதவி மற்றும் ஆதரவுக்கு வேண்டுகோள் விடுக்கவுமான மற்றொரு சொற்றொடராக உள்ளது. அது ஒரு வேண்டுகோளோடு முடிந்துவிடவில்லை. “நாம் கவணமாக,வழிப்புடன்,பொறுமையாக மற்றும் சளைக்காமல் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்றோம். என் நேச இலங்கைக்கு பெரிய கனவுகள் உண்டு. நான் அவற்றை நிறைவேற்ற உங்கள் ஆசீர்வாதம் மற்றும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்இ” என அவர் மீண்டும் கூறினார்.

மீண்டும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சிறிசேன பேசினார்: “நான் உலகின் சிறந்த அறிவுடன் எங்கள் இளைஞர்களை பலப்படுத்துவதற்கும் இலங்கையை ஒரு பின்பற்றத்தக்க ஜனநாயகமாக ஆக்கவுமான என் பொறுப்பை வலியுறுத்துவதோடு இந்த உன்னத முயற்சிக்காக உங்கள் உதவி மற்றும் ஆசிகளை எதிர்பார்க்கிறேன்.”

யாரும் இந்த பரிதாபமான தோரணையில் கொஞ்சமும் நம்பிக்கை வைத்துவிடக் கூடாது.

Copyright © 1998-2016 World Socialist Web Site – All rights reserved