- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

இலங்கை குண்டு வெடிப்பு; பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் கைது
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, பாதுகாப்பு துறை முன்னாள் செயலாளர் மற்றும் கட்டாய விடுப்பில் உள்ள அந்நாட்டின் காவல்துறை தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்த நிலையில், இதுகுறித்து இலங்கை அரசு தீவிர விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சி.ஐ.டி அதிகாரிகள், பாதுகாப்பு துறை முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்ட இலங்கை போலீஸ்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோர் இன்றைய விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இருவரும் மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி வரமறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நரஹென்பிட்டாவில் உள்ள காவலர்களுக்கான மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள் புஜித்தை கைது செய்ததுடன், ஹேமசிறியை தேசிய மருத்துவமனையிலிருந்து கைது செய்தனர்.