இலங்கை உள்ளாட்சி தேர்தல் : ராஜபக் ஷே கட்சி அபாரம்

இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக் ஷே தலைமையிலான கூட்டணி, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன.
முன்னணி : இதில், முன்னாள் அதிபர் ராஜபக் ஷே தலைமையிலான, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி கூட்டணி, 909 இடங்களில், அதிக ஓட்டுகள் பெற்று, முன்னணியில் உள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான, ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி, 459 இடங்களில் முன்னணியில் இருந்தது. இதன் மூலம், பெரும்பாலான இடங்களில், ராஜபக் ஷே தலைமையிலான கூட்டணி, வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும், தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்றும், அவர்கள் தெரிவித்தனர்.திருப்புமுனைகடந்த, 2015ல் நடந்த, இலங்கை அதிபர் தேர்தலில், ராஜபக் ஷே படு தோல்வி அடைந்தார். அதற்கு பின், பல வழக்கு களையும் அவர் சந்திக்க நேர்ந்தது.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில், அவரது கட்சி வெற்றி பெற்றுள்ளது, அவரது அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என, இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.