இலங்கை அரசு ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் கட் !!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு மே மாத சம்பளத்தை அளித்து உதவும்படி இலங்கை அரசு, அரசு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷேவின் செயலாளர் பிபி ஜெயசுந்தரா அரசு ஊழியர்களுக்கு எழுதி உள்ள கடித்ததில் கூறப்பட்டு இருப்பதாவது: கொரோனா தொற்றால், சர்வதேச வர்த்தகம் ஏற்றுமதி,சுற்றுலா போன்றவற்றின் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருமானங்கள் தடைபட்டுள்ளது.

இது பொருளாதாரத்தின் மீதான தற்காலிக அழுத்தமாக இருந்த போதிலும் வெளிநாட்டு கடன்களை செலுத்தியாக வேண்டும். எனவே இச் சூழலை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் தங்களின் மே மாத சம்பளத்தை முழுமையாகவோ, அல்லது பகுதியாகவோ கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு தந்து உதவ வேண்டும். இதன் மூலம் சிறிய அளவில் பற்றாக்குறை குறைப்பதுடன் கடன் மீதான அழுத்தம் குறையும் என கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.