- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

இலங்கை அதிபர் அதிரடி – கடனை வசூலிக்க வங்கிகளுக்கு தடை
‘கொரோனா வைரஸ் தொற்றால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஆறு மாதத்துக்கு, கடன், வட்டியை வங்கிகள் வசூலிக்கக் கூடாது’ என, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, தற்போது உலகையே உலுக்கி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 60ஐ எட்டியுள்ளது. கொரோனா தாக்கத்தால் இலங்கையில் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ‘ஆறு மாதங்களுக்கு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய கடனுக்கான வட்டிப் பணத்தை வங்கிகள் வசூலிக்கக் கூடாது’ என, உத்தரவிட்டுள்ளார். மேலும், தொழில்துவங்க யாரேனும் விண்ணப்பித்தால் 4 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும். பருப்பு ஒரு கிலோ 65 ரூபாய்க்கு மேல் விற்கக் கூடாது’ என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா அச்சத்தால் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ள பெரும் தொழில் நிறுவனங்களும், சிறு தொழில் முனைவோரும், அரசின் இந்த அறிவிப்பை வெகுவாகப் பாராட்டி வருகின்றன.