- கிரண் மோரேவுக்கு கொரோனா: மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சோதனை
- இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு - 3 பேர் உயிரிழப்பு
- பொது செய்தி தமிழ்நாடு 'நீட்' பயிற்சியை மீண்டும் 25 ல் துவங்க உத்தரவு
- ஸ்ரீ ராம நவமி - ஏப்ரல் 21
- பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன

இலங்கையை அடித்து துவைத்த அவுஸ்திரேலியா: ஷேவாக்காக மாறி அஸ்வின் கொடுத்த பலே ஐடியா
இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களிடம் இருந்து பந்துவீச்சாளர்களை பாதுகாக்க ஒரு ஐடியாக கொடுத்துள்ளார்.
சமீபத்தில் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் இமாலய ஓட்டங்களை குவித்து உலகசாதனை படைத்தது.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 263 ஓட்டங்கள் குவித்து புதிய உலக சாதனையைப் படைத்தது.
மிகப் பெரிய ஓட்டங்களை எட்டிய அவுஸ்திரேலியா பின்னர் தனது பந்து வீச்சு மூலம் இலங்கை அணியை சுருட்டி 85 ஓட்டங்களால் வெற்றியும் பெற்றது.
இதன் மூலம் முதல் டி20 போட்டியை மிகப் பெரிய சாதனைப் போட்டியாக மாற்றி விட்டது அவுஸ்திரேலியா.
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஹார்ஷா போக்ளே போட்ட டுவிட்டில், 10 ஓவர்களில் 153 ஓட்டங்கள்?, 39 பந்துகளில் 100 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப்?, மேக்ஸ்வெல் 145 ஓட்டங்கள்?, மொத்தத்தில் 263 ஓட்டங்களா..? அடுத்து என்ன..? வேறு பவுலர்கள் இருக்கீங்களா? என்று கேட்டுள்ளார்.
அதற்கு அஸ்வின், பவுலிங் பவர் பிளேயில் வரும் 4 ஓவர்களில் 2 ஓவர்களில் டென்னிஸ் பாலைப் போட்டு பந்து வீசலாம். மீதமுள்ள 2 ஓவர்களுக்கு பவுலிங் மெஷினைப் பயன்படுத்தலாம் என்று ஜாலியாக கூறினார்.