இலங்கையில் விரைவில் மின்சாரத் தட்டுப்பாடு வரலாம்

இலங்கையில் தொடர்ச்சியாக நிலவும் வரட்சி இன்னும் மோசமான நிலையைஅடைந்தால் விரைவில் மின்சாரத் தட்டுபாடு ஏற்படலாம் என்றுஅச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக இலங்கை மின்சாரசபையின் மின்சாரப் பொறியியலாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படிஅறிக்கையில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது இலங்கையின் முழு மின்சாரஉற்பத்தியில் 12வீதம் குறைவடைந்துள்ளது. நீர் மின்சார உற்பத்திற்கு பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்கள் ஐம்பது வீதம் குறைந்துள்ளன. இது ஒரு மகிழ்ச்சிதரும் விடயமல்ல. இவ்வாறு மழை வீழ்ச்சி குறைந்தால் தினமும் ஒரு சதவீதம் என்ற அளவின்படி மின்சார உற்பத்தி குறைவடையும்.
நீர் மட்டம் 20 வீதம்  குறைவடைந்தால் மின்சார உற்பத்தி முழுமையாக நிறுத்தப்படும். ஏதிர்வரும் மாதங்களில் மழை வீழ்ச்சி குறைந்தால் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்படும். தற்போது நாட்டின் முழுமையான மின்சார பாவனையில் 40 வீதம் நுரைச்சோலைஅனல் மின்சார நிலையத்தினால் வழங்கப்படுகின்றது. மிகுதி 60 வீதம் மின்சாரத்தை எங்கிருந்து பெறுவது என்புத இலங்கைமின்சாரசபைக்கு ஓரு பிரச்சனையாகவே விஸ்வரூபம் எடுக்கும்” என்றுமின்சாரபொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளுது.