- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

இலங்கையில் முஸ்லிம்களே இல்லாத ராஜபக்ஷவின் அமைச்சரவை !!
இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவாகிய நிலையில், ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி, ஆட்சி செய்யும் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடமே கையளித்தது.
இதற்கமைய, ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் தேதிக்கு பின்னரே கிடைக்கும் என்ற நிலையில், இடைகால அரசாங்கமொன்றை உருவாக்க கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான நிர்வாகம் திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில், இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 21ம் தேதி நியமிக்கப்பட்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறாத நிலையில், இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களிலும் முஸ்லிம் ஒருவரேனும் இடம்பெறவில்லை என்பது, முஸ்லிம் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட போதிலும், அதில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறவில்லை. ஆனால், டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகத் தொண்டமான் என தமிழர் இருவர் – அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.