இலங்கையில் தென்னிலங்கை போர்க் குற்றவாளிகள் வீரர்களாகியுள்ளனர் என்பதே இன்றைய துயரநிலை என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இலங்கையில் தென்னிலங்கை போர்க் குற்றவாளிகள், வீரர்களாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ் வாறு கூறியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக எழுப்பப் பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர், குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்ப டுத்தப்பட்டுள்ளனர்.இது தான் எமது தலைவர்களின் இன் றைய துயரநிலை என்றும் தலைவர்கள் இந்த விடயத்தை பல்வேறு காரணங்களுக்;காக மறந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் இந்த விடயத்தை என்றும் மறக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள் ளார்