- தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?
- முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்
- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம் பெண்ணின் சடலம் தகனம் !!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கையில் மரணமடைந்த முஸ்லிம் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது.
மரணமடைந்த மேற்படி பெண் புற்றுநோய் மற்றும் இதயக்கோளாறு ஆகியவற்றினாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கடந்த 09 மாதங்களாக இந்தியா – வேலூரிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்ததாக அவரின் உறவினர் றம்ஸான் என்பவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
இதனையடுத்து கடந்த 20ஆம் திகதி இவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியபோது, கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இரணவில தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மேற்படி பெண், பின்னர் 22ஆம் திகதி அங்கொடயிலுள்ள தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையிலேயே இந்தப் பெண் நேற்று மரணமடைந்தார் என சுகாதார அமைச்சு அறிவித்தது.
இவ்வாறு மரணமடைந்த முஸ்லிம் பெண்ணின் உடல் – நேற்றைய தினமே சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ், கொடிகாவத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இறந்த பெண்ணின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவரின் கணவரும், குடும்ப உறுப்பினர்கள் சிலரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.