இலங்கையின் யுத்த வடுக்களை உலகம் மறந்து விட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் மறக்கவில்லை..

ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சியாளர்களின் அடவாடித்தனங்கள், அடக்கு முறைகள் இனவாத அல்லது மதவாதப் போக்கு ஆகியவற்றால் பாதிக்கபபட்ட மக்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காது. அந்தளவிற்கு எத்தனையோ ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள பல நாடுகளில இந்த அனர்த்தஙகளும் அடக்குமுறைகளும் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற “.இறுதி யுத்தத்தின்” போதும் அதற்குப் பின்னரும் மேற்கொள்ளப்பட்ட அரச படைகளின் மோசமான நடவடிக்கைகள் அங்கு யுத்த வடுக்களை ஏற்படுத்தின.
அந்த நாட்களில் இடம்பெற்ற அரசபடைகளின் போர்க்குற்றங்கள் மறைவான இடங்களில் கொல்லப்பட்டவர்களின் முன்பாக நடந்தபடியால் அவை வெளியுலகத்திற்கு தெரியாமல் போய்விட்டது. களத்தில் நின்ற போராளிகள் கூட எவ்வாறு துன்புறுத்தப்பட்டு கொல்லபபட்டார்கள என்பதை அவர்களை வழிநடத்திய தளபதிகள் கூட அறிந்திருகக வாயப்பிருக்கவில்லை.
இவ்வாறான நிலையில தொடர்சசியாக பல வெளிநாட்டு ஊடகங்கள்; மேற்கொண்ட முயற்சியினால் போர்க்குற்றங்கள் புரிந்த அரச படைகளைச் சேர்ந்தவர்களே தங்கள் கருவிகளில் எடுக்கப்பட்ட பல மோசமான வீடியோ காட்சிகளை ஊடகங்களுக்கு பணத்தைபெற்றுக்கொண்டு கையளித்தன் பின்னர்தான் இலங்கை அரசும் ஏனைய சில நாடுகளின் படைகளும் புரிந்த மிக மோசமான போர்க்குற்றங்கள் அம்பலத்திற்கு வந்தன.
இன்று எத்தனையோ ஆண்டுகள கழிந்தாலும் படையினரும் இலங்கை அரசும் செய்த போர்க்குறறங்களுக்கு தகுந்த தண்டனை கிட்டவில்லை. ஆனால் மறுபக்கத்தில் யுத்தவடுக்களைத் தாஙகிங்கொண்டு இன்னும் தங்கள் காணமற்போன உறவுகளைத் தேடிய வண்ணம் உள்ள எமத மக்களின் கேள்விகளுக்கு பதில் கிட்டவேயில்லை. இலங்கை அரசு போர்க்குறறங்கள் செய்த ஒரு மாபெரும் குற்றவாளி என்று தெரிந்தும் உலகம் அந்த பயஙகரவாதியை மன்னித்து விடுவதறகு துடித்துக்கொண்டு இருக்கின்றது.
ஆனால் உண்மையையும் நீதியையும் தேடிய வண்ணம் இலங்கையின் வட பகுதியில் பல வருடங்களாக காத்திருக்கும் சொந்தங்கள் சொல்லுகின்ற கதைகள் வலிகள் மிக்கவை என்கின்றார் வட பகுதிக்கு விஜயம் செய்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம்; திரு சலீல் செட்டி. அவரது வார்த்தைகளில் ஒரு பொறுப்புக் கூறும் தன்மை மேலோங்கியுள்ளது. அவர் தொடர்ந்து சொல்லுகின்றார்” இலங்கை அரசானது சுமார் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு நீதி வழங்கவேண்டிய கடனாளியாக உள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கபபடும் வரை இலங்கையில் காயங்கள் குணமடைய ஆரம்பிக்காது. நம்பிக்கை மிக்க எதிர்காலம் ஒன்றை நோக்கி நகரவும் முடியாது” என்று.
ஆமாம்! உலகம் மறந்த விட்ட எமது உறவுகளின் யுத்த வடுக்கள் மறைக்கப்படாமல் இருக்க இவ்வாறானவர்களின் பிரசன்னம் அந்த மண்ணில் அவசியமாகின்றது.