இலங்கையின் கலாச்சாரத்தலைநகர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைமையகம் அறிவிப்பு  யாழ்நகர் விழாக்கோலம் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் ஒன்றியங்கள் கிளைகள் ஆகியவற்றின் பேராதரவுடன் இலங்கைக்கிளை நடாத்தும் 13வது உலக மாநாடும், இலங்கையின் கலாச்சாரத்தலைநகர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைமையகம் அறிவிப்பு
யாழ்நகர் விழாக்கோலம்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் ஒன்றியங்கள் கிளைகள் ஆகியவற்றின் பேராதரவுடன் இலங்கைக்கிளை நடாத்தும் 13வது உலக மாநாடும் அனைத்துலக பேரவைக்கூட்டமும் 2017 ஆவணி மாதம் 5ம் 6ம் நாள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் (2048 திருவள்ளுவராண்டு) இலங்கையின் கலாச்சாரத் தலைநகர் யாழ்ப்பாணத்தில் இடம் பெற உள்ளது.

உலகத் தமிழ் இனத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்கும் உயர் நோக்குடனும் இலங்கை இந்தியாவில் வாழும் தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்னும் குறிக்கோளுடனும் அரசியற்சார்பற்று இன மத பேதங்களைக்கடந்து தமிழ்ப் பண்பாட்டாளர் என்னும் ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டும் எனும் உயர்ந்த கொள்கையுடனும் தமிழ் மொழியினை மறந்து போனவர்களைத் தாய்மொழி தமிழ் உணர்வுக்குக் கொண்டுவரும் நல்நோக்குடனும் 1974 தைத் திங்கள் சுறவம் 08.01.1974 அன்று இலங்கை கலாச்சாரத் தலைநகர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4வது உலகத் தமிழாராட்சி மாநாட்டின்போது தோற்றுவிக்கப்பட்டது. மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ் அறிஞர்களால் ஒன்று கூடி தோற்றுவிக்கப்பட்ட இவ் இயக்கம் தமிழர்களை ஒன்றிணைப்பதில் வெற்றிகண்ட உலகப் பேரியக்கம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இவ் இயக்கம் கனடாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.
உலக நாடுகளில் பல கிளைகளை அமைத்து இதுவரை 1977 சென்னை தமிழ்நாடு ( இந்தியா) 1980 மொரீசியஸ் 1985 சேலம் தமிழ்நாடு (இந்தியா) 1987 கோலாலம்பூர் ( மலேசியா ) 1992 சிட்னி (அவுஸ்திரேலியா) 1996 ரொறன்ரோ (கனடா) 1999 வெள்ளி விழா சென்னை(இந்தியா) 2001 டர்பன் (தென் ஆபிரிக்கா) 2004 புதுவை (இந்தியா) 2007 கோலாலம்பூர் (மலேசியா) 2011 பிரான்ஸ் 2014 யேர்மனி ஆகிய இடங்களில் 12 உலக மாநாடுகளையும் பல சிறப்பு மாநாடுகளையும் தமிழ் மக்களின் நலன் கருதி நடாத்தியுள்ளது. கடந்த காலத்தில் இடம் பெற்ற மாநாடுகள் தமிழ் உலகை ஒன்றிணைத்துள்ள செயற்பாடாகும்.

இம்மாநாடுகள் ஊடாகத் தமிழ்வழி இறைவழிபாடு தமிழ்க்கல்வி தமிழ்கலை கலாச்சாரப் பண்பாடு ஊக்குவிப்பு தமிழர் இறையாண்மை தமிழர் நிறுவனங்களின் ஒன்றிணைப்பு மறந்து போன மறக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றுத்தேடல்கள் தமிழ் ஆண்டு தமிழர் திருநாள் தமிழர் மரபுரிமைத்திங்கள் உலகளாவிய தமிழர்களின் ஒருங்கிணைப்பு உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் தமிழர் கொடி தமிழர்கீதம் மேலும் தமிழ் ஆய்வுகள் உரையாடல்கள் ஆகியவற்றினை நடாத்தி தீர்வுகளையும் எண்ணங்களையும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் உலகறிய வைத்துள்ளது.

30க்கு மேற்பட்ட நாடுகளில் கிளைகளையும் 50மேற்பட்ட நாடுகளுடன் தொடர்புகளையும் யுனஸ்கோவில் அங்கீகாரத்தினையும் பெறுவதற்கான வாய்ப்பினையும் பெற்றுள்ளது. இதுவரை இயக்கத்திற்கு உலகெங்கும் வாழும் பல கல்வியாளர்கள் ஆய்வாளர்கள் கலை இலக்கிய வாதிகள் மற்றும் நிபுணத்தவம் மிக்கவர்களின் ஆசியும் ஆதரவும் இதற்கு உண்டு.

இந்த மாபெரும் மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்தியக்கிளையின் மூத்த உறுப்பினர்களாக விளங்கும் மாநாட்டுத் தலைவர் முனைவர் பாஞ் இராமலிங்கம் இந்தியக்கிளைத் தலைவர் திருமதி மாலதி இராஜவேலு (இந்தியா) மற்றும் எமது கிளைப் பிரதிநிதிகள் அனைவரும் ஆக்கபூர்வ ஆதரவினை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கதாகும் . அரசும் யாழ் முதல்வரும் அமைச்சர்களும் அவை உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்திற்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.. இந்தியாவிலிருந்து மற்றும் உலக நாடுகளில் இருந்து பல பிரமுகர்களும் அறிஞர்களும் மேற்படி மாநாட்டில் கலந்துகொள்வதுடன். 25 நாடுகளில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பிரதிநிதிகள் உட்பட 200க்குமேற்பட்ட பேராளர்கள் கலந்து கொள்வது சிறப்பு நிலையாகும். .
இறுதி யுத்தத்தின் நிகழ்வில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் எமது மக்களுக்கு சிறிதேனும் மருந்து தடவும் முயற்சியாக ஒருமுகமாக இம் மகாநாட்டினை இலங்கையில் நிகழ்த்துவதற்குத் தலைமை தீர்மானித்தது. வரலாற்று முக்கியத்தவம் மிக்க இந்த இருநாள்மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்து வரும்குழுவில் மாநாட்டுத்தலைவர் கலாநிதி பாஞ்இராமலிங்கம் (இந்தியா) உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத்தலைவர் கனடாவாழ் திரு.வி.சு.துரைராஜா யேர்மனிவாழ் செயலாளர் நாயகம் திரு.துரைகணேசலிங்கம் இயக்கத்தின் சர்வதேச இணைப்பாளர் திரு.இ.இராஜசூரியர் தலைமையக ஆலோசகர் திரு.மாவைசோ.தங்கராஜா கனடா கிளைத்தலைவரும் மாநாட்டு நிதிப்பொறுப்பாளர் திரு.மா.இரவிச்சந்திரன் இந்தியாவாழ் தலைமையக சட்ட ஆலோசகர் பேராசிரியர் சி.இராமமூர்த்தி இலங்கையில் இருந்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் திரு.தம்பிமுத்து குருகுலராஜா(வடமாகாணக்கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ) இலங்கைக்கிளையின் தலைவரும் மாநாட்டுக் கலை பண்பாட்டுப் பொறுப்பாளருமாகிய திரு.அ.சத்தியானந்தன் இலங்கைக்கிளையின் செயலாளரும் மாநாட்டுச் செயலாளருமான திரு.சு.பிரசாந்தன் இலங்கைக்கிளையின் பொருளாளரும் மாநாட்டு உதவி நிதிப்பொறுப்பாளருமான திரு.அ.கேசவமூர்த்தி மாநாட்டு ஊடகத்துறைப்பொறுப்பாளர் திரு.செந்தில்வேலவர் தலைமையக இளைஞரணிப் பொறுப்பாளர் திரு. கு.பிரதீப்குமார் மாநாட்டு ஆலோசகர் திரு.ம.செல்வின் மற்றும் நோர்வேயைச் சேர்ந்த உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க துணைத்தலைவர் திரு.சு.தியாகலிங்கம் ஆகியோர் முக்கிய பொறுப்புக்களை ஏற்று செயற்பட்டு வருகின்றனர். இவர்களுக்குத் துணையாகத் தலைமையக ஊடகத்துறைப் பொறுப்பாளர் கனடாவாழ் திரு.ஆர்.என்.லோகேந்திரலிங்கம் அவர்களும் திரு.கி.யேம்ஸ் அல்ஸ்ரன் நிருவாகச் செயலர் ஆகியோரும் செயற்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு 2016ல்எமது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்திற்கு ஒரு ஆரோக்கிய ஆரம்பமாக இந்திய மண்ணின் புதுவை மாநிலத்தில் உள்ள பாண்டிச்சேரி தலைநகரில் இடம்பெற்ற இரண்டு நாள் மாநாடு அனைத்துலக இயக்கத்தின் உறுப்பினர்கள் அனைவர்க்கும் உற்சாகம் தரும் செயற்பாடாக அமைந்தது. உலகில் தமிழ்மொழியினதும் தமிழ்ப் பண்பாட்டினதும் காவல் தெய்வங்களாக விளங்கும் இந்திய தேசமும் தமிழ்நாடு என்னும் தாய்த்தமிழகமும் அமைந்தள்ள இந்திய மண்ணில் தமிழ்மொழியின் நறுமணம்கமழும் பாண்டிச்சேரியில் எமது இயக்கத்தின் அகிலத்து அங்கத்தவர்களும் அறிஞர்களும் கூடிப்பேசி ஆராய்ந்து பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்யக்கிடைத்த அந்த அரிய நிகழ்வு எம்மைப் பெருமடங்கு உயர்த்தி அழைத்துச் சென்ற ஊக்கியாக அமைந்திருந்தது என்றே கூறவேண்டும். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு இலங்கையில் இவ்இயக்கம் தோன்றிய யாழ் மண்ணில் நாடாத்தப்படவேண்டும் என அங்கு முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது
2012 கல்வித்திட்டம் கடந்த 2012ம் ஆண்டு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் சென்னையில் (இந்தியா) உலகத் தமிழ்க் கல்வி மாநாடு ஒன்றினை நடாத்தி அம்மாநாட்டுத் தீர்மானத்திற்கமைய சென்னையில் உள்ள முக்கிய பல்கலைகழகங்களில் ஒன்றான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் மொழி வளர்ச்சிக்காகவும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அடையாளத்தினைப் பேணிப் பாதுகாக்கும் பணியினை எமது இயக்கம் மேற்கொண்டு தென்ஆபிரிக்கா அவுஸ்திரேலியா சுவிற்சர்லாந்து கனடா போன்ற நாடுகளில் அத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்ஆண்டு மியான்மார் நோர்வே பொன்ற நாடுகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
. உலகப் பொதுமறையாம் திருக்குறளை எமது தமிழ் மறையாக ஏற்று செயற்படுவதற்கு இலங்கையில் வாழும் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை வாழ்வில் திருக்குறளைப் பின்பற்றி வாழ இலங்கை தழுவிய ரீதியில் சிறியவர்களுக்கான திருக்குறள் மனனப்போட்டி இடம்பெறவுள்ளது.

இம் மாநாட்டின் கருப்பொருளாக தமிழர் மொழி பண்பாடு எதிர்நோக்கும் சவால்களும் முன்னெடுப்புக்களும் என்னும் ஆழப்பதிந்த கருத்ததில் சிறப்பு வெளியீடாக இக்கருப்பொருளை உள்ளடக்கியதாக 300 பக்கங்களைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டு மலர் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது. இம்மாநாட்டு மலரின் கருப்பொருள் உள்ளடக்கிய விடயங்கள் பற்றியதாகக் கட்டுரைகளை பாமினி யூனிக்கோட் அல்லது சாதாரணம் ஆகிய எழுத்தில் தமிழில் தட்டச்சு செய்த எழுத்துருவில் A 4 2000 சொற்களுக்கு மேற்படாமல் எழுதி அனுப்பிவையுங்கள் . மேற்படி விடங்கள்பற்றிய கட்டுரைப்போட்டி ஓவியப்போட்டி பேச்சுப்போட்டி என்பனவும் இலங்கை தழுவிய ரீதியில் கல்வி நிலையங்கள் தனியார் கல்வி நிலையங்கள் ஊடாக மேல்வகுப்புக்கள் கீழ் வகுப்புக்கள் பாலர்வகுப்புக்கள் ஆகியவற்றிற்கு இடம்பெறவுள்ளன. இங்கு இடம்பெறும ஆவணக்கண்காட்சியில் தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழர்களின் வாழ்வியல் வரலாறு மொழி பண்பாடு இலக்கியம் சார்ந்த நுால்கள் இறு வெட்டுக்கள் ஒலி இழை நாடாக்கள் அரிச்சுவடிகள் புகைப்படங்கள் என்பன காட்சிக்கு வைக்கப்படும் பேராளர்கள் கட்டணமாக வெளிநாடுகளில் இருந்து 100 USDoller இந்தியா அந்நாட்டு நாணயத்தில் ஆயிரம் ரூபாய்
இலங்கை அந்நாட்டு நாணயத்தில் ஆயிரம் ரூபாய்
ஆகியன இலங்கை வங்கியூடாக அனுப்பிவைக்கப்படல் வேண்டும். விபரங்களுக்கு மின் அஞ்சல்மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
கனடாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை நடாத்தும்13வது உலக மாநாட்டில் ஆய்வரங்குகள் கருத்தரங்குகள் கலைநிகழ்வுகள் விளம்பரங்கள் மற்றும் சந்திப்புக்கள் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் 16.05.2017க்கு முன்னர் கீழ்க்காணும் மின்னஞ்சல்கள் ஊடாகத் தொடர்பு கொள்ளுங்கள் மாநாட்டு அலுவலகம் கலாவாசா-10 மைல்போஸ்ற் தெரு மாவிட்டபுரம் தெல்லிப்பளை இலங்கை
Conference Address : Kalavasa-10, Mile Post Lane, Mavidapuram, Tellippalai, Sri Lanka.

திரு. ம.செல்வின் மாநாட்டு ஆலோசகர் Email : selvinmsi@gmail.com, . Phone: 0094 770847133

மாநாட்டுத்தலைவர் கலாநிதி.பாஞ் இராமலிங்கம் panchramalingam@gmail.com அகிலத்தலைவர் திரு.வி.சு.துரைராஜா raja@cfsginc.com
செயலாளர்நாயகம் திரு.துரைகணேசலிங்கம் imtc1974@yahoo.com மாநாட்டுதுணைத்தலைவர் திரு.இ.இராஜசூரியர் imtc.rsoori@gmail.com
மாநாட்டுச் செயலாளர் திரு.சு.பிரசாந்தன். E.Mail: artpirasa@gmail.com
மாநாட்டு ஊடகத்துறைப் பொறுப்பாளர் திரு.தே.செந்தில்வேலவர் E.Mail: velaver@yahoo.com
நிருவாகச் செயலர் திரு.கி.யேம்ஸ் அல்ஸ்ரன் alston@hotmail.de

இவ்வாறு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மாநாட்டுக்குழு தலைவர் கலாநிதி பாஞ் இராமலிங்கம் (செயலாளர் இந்திய ஒன்றியம்) மாநாட்டுச் செயலாளர் திரு.சு.பிரசாந்தன் (செயலாளர் இலங்கைக்கிளை) ஆகியோர் மாநாட்டுக்குழு சார்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாக மாநாட்டு ஊடகத்துறைப் பொறுப்பாளர் திரு.தே.செந்தில்வேலவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.