இலங்கைத் தமிழர் எதிர் நோக்கு ஆபத்து!!!

சிறைகளில் உள்ள தமிழ் பேசும் அரசியல் கைதிகள் பலிக்கடாக்கள் ஆகப் போகின்றார்களா?

இனக் கலவரம் ஒன்றைத் தூண்டுவதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தை பதவியை விட்டு அகற்றலாம்.

தற்போது சிறைகளில் உள்ள தமிழ்ப் பேசும் அரசியல் கைதிகளை இனக்கலவரங்களின் போது குட்டிமணி தங்கத்துரை ஆகியோரைக் கொலை செய்தது போன்று கொன்று, அனைத்து சிறைகளிலும் படுகொடலைகளைச் செய்வது!

அதே போன்று சிறைகளில் மகிந்த ராபக்சா மகிந்த ராஜபக்சா ஆகியோரை விமர்சித்து எழுதியதால் தற்போது சிறைகளில் அடைக்கபட்டுள்ள சிங்கள பத்திரிகையாளர்களையும் கொலை செய்து அவர்கள் தொடர்பாக சர்வதேசத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்!!

தமிழ் மக்களுக்கும் அரசியல் கைதிகளுக்கும் எதிராக இனக்கலவரங்களை ஏற்படுத்தினாலும் சம்பந்தன் மாவை சுமந்திரன் போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளுக்கு அதி கூடிய பாதுகாப்பு வழங்கபபடும். ஆனால் அப்பாவிகளான தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள். கொழும்பில் உள்ள தமிழர்கள் வீடுகளும் வர்த்தக நிலையங்களும் தீவைக்கப்பட்டு கொள்;ளையடிக்கப்படும்!

நாம் மேலே குறிப்பிட்ள்ளவை கற்பனையான வாக்கியங்கள் அல்ல! எமது ஆசிரிய பீடத்திற்கு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய நண்பர்கள் அனுப்பி வைத்த தகவல்கள்!

முன்னர் யூலைக் கலவரங்கள் தூண்டிவிடப்பட்ட போது குட்டிமணி ,தங்கத்துரை போன்ற நூற்றுக்கணக்கான விடுதலைப் போராளிகள் கொல்லப்பட்டார்கள்.

தற்போது யூலை மாதம் இறுதிவாரம் வந்து அந்த மாதம் தாண்டிச் செல்கின்றது.

இனிமேல் நடப்பவை ஆகஸ்ட் கலவரம் எனறோ அல்லது செப்டம்பர் கலவரம் என்றோ ஆண்டுக்கு ஒரு தடவை நினைவு கூரப்படலாம்.

புலம் பெயர்ந்தநாடுகளில் நாம் கூட்டங்களை நடத்தி, தமிழர் வர்த்தக நிலையங்களை மூடி எமது அனுதாபங்;களை தெரிவிக்கலாம். ஆனால் இவ்வாறு எதுவும் நடவாமல் செய்யலாமே! அது தொடர்பாக திட்டமிடவேண்டிய அவசியம் நெருங்கியுள்ளது.

கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் இரத்த ஆறு ஓடலாம்.

இவற்றை தடுப்பதற்குரிய திட்டங்களை அனைவரும் சேர்ந்த தடுக்க வேண்டும். தமிழ் பேசும் அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை.
கடந்த காலங்களைப் போல திடீர் என்று இந்த தாக்குதல் சம்பவங்கள் நடைபெறலாம். சிறைகளில் உள்ள தமிழ் பேசும் தமிழ் பேசும் அரசியல் கைதிகள் குறி வைக்கபபடலாம். பல விடுதலைப் புலிகளின் முன்னால் போராளிகள் அநியாயமாகக் கொலலப்படலாம்!

எனவே நாம் இப்போது இருந்தே மிகுந்த கவனத்துடனும் நிதானத்துடனும் இந்த ந◌ாட்கள் வந்து விடாமல் இருக்க குரல் கொடுக்க வேண்டும்.

தமிழ் பேசும் அரசியல் கைதிகளை காப்பாற்ற வேண்டும்.