இருதரப்பு உறவு, ஒப்பந்தங்கள், பாதுகாப்பு – ட்ரம்ப், மோடி பேட்டி !!

டெல்லி ஐதராபாத் இல்லத்தில் நடந்த ஆலோசனைக்கு பின் பிரதமர் மோடி பேசுகையில், கடந்த 8 மாதங்களில் 5வது முறையாக ட்ரம்பை சந்தித்துள்ளேன். நேற்றைய தினம் அலகாபாத்தின் மோதிரா மைதானத்தில் அதிபர் ட்ரம்பிற்கு வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுவொரு மறக்க முடியாத தருணமாக இருக்கும். இந்தியாவும், அமெரிக்காவும் 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய நட்பு நாடுகள் ஆகும்.

இன்றைய தினம் அமெரிக்கா – இந்தியா இடையிலான அனைத்து முக்கியமான விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை, ஆற்றல், வர்த்தகம் ஆகியவற்றில் இருதரப்பு உறவை மேம்படுத்த உள்ளோம்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் பாதுகாப்புத் துறை தொடர்பாக உருவாகும் ஒப்பந்தம் மிக முக்கியமானது. வர்த்தகத்துறையில் நமது அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு முடிவை எட்டியுள்ளார்கள்.

View image on Twitter

இதற்கு சட்டப்பூர்வ வடிவம் கொடுக்க இருதரப்பும் ஒருங்கிணைந்து செயல்படும். மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு நமது அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது என்று கூறினார்.

இதையடுத்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவின் கம்பீரம், தாராள மனப்பான்மை, உபசரிப்பு ஆகியவற்றைக் கண்டு நானும், மெலானியாவும் பிரமிப்பு அடைந்துள்ளோம். மோடியின் சொந்த மாநில மக்கள் அளித்த வரவேற்பை நாங்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்போம்.

அப்படியென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன?- டெல்லியில் ட்ரம்ப், மோடி இன்று பேச்சுவார்த்தை!

உலகின் மிகச்சிறந்த ராணுவ உபகரணங்களான MH-60 ரோமியோ மற்றும் அபாச்சி ஹெலிகாப்டர்கள், அமெரிக்க ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை வாங்குவது தொடர்பாக 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இது பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட உதவிகரமாக இருக்கும். எங்களது பேச்சுவார்த்தையின் படி, இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக இருநாட்டு குடிமக்களையும் பாதுகாப்பதில் உறுதியாக செயல்படுவோம்.

61 people are talking about this

இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு அவர்கள் மண்ணில் வேறூன்றும் பயங்கரவாதத்தை ஒழிக்க முற்படுவோம். எங்கள் பேச்சுவார்த்தையில் பாதுகாப்பான 5ஜி ஒயர்லெஸ் நெட்வொர்க்கின் முக்கியத்துவம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

அதிவேகமாக வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்பம் குடிமக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். இன்றைய பேச்சுவார்த்தையில் இந்தியா – அமெரிக்கா இடையில் மனநலம், மருந்துப் பொருட்களின் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.