இரானி கோப்பை சகா சதம்

குஜராத் அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணியின் விரிதிமன் சகா சதமடித்துகைகொடுத்தார்.

ரஞ்சி கோப்பை ‘நடப்பு சாம்பியன்’ குஜராத், ‘ரெஸ்ட் ஆப்இந்தியா’ அணிகள் மோதும் இரானி கோப்பை கிரிக்கெட்போட்டி மும்பையில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் குஜராத் 358, ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ 226 ரன்கள் எடுத்தன. மூன்றாம்நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் குஜராத் அணி 8 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்திருந்தது.

நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த குஜராத் அணிக்கு ஹர்திக்படேல் (0) ஏமாற்றினார். சிராக் காந்தி (70) நம்பிக்கை தந்தார். இரண்டாவது இன்னிங்சில் குஜராத்அணி 246 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ சார்பில் நதீம் 4 விக்கெட்வீழ்த்தினார்.

பின், 379 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய ‘ரெஸ்ட் ஆப்இந்தியா’ அணிக்கு ஹெர்வாத்கர் (20), அபினவ் முகுந்த் (19) சுமாரான துவக்கம் தந்தனர். கருண்நாயர் (7), மனோஜ் திவாரி (7) ஏமாற்றினர். பின் இணைந்த கேப்டன் புஜாரா, விரிதிமன் சகா, விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டனர்.

அபாரமாக ஆடிய சகா, சதமடித்தார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த புஜாராஅரைசதமடித்தனர். நான்காம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணி 4 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்து, 113 ரன்கள் பின்தங்கி இருந்தது. சகா (123), புஜாரா (83) அவுட்டாகாமல் இருந்தனர்.