இராகாலயம் இசைக் கல்லூரியின்; 16வது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் கடந்த 16 ஆண்டுகளாக இயங்கிவரும் இராகாலயம் இசைக் கல்லூரியின் 16வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமையன்று ஸ்காபுறோ பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பல மாணவ மாணவிகளின் இனிதான இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் அங்கு கலந்து கொண்டு மாணவ மாணவிகளையும் கல்லூரியின் அதிபரையும் வாழ்த்திச் சென்றனர். இங்கே காணப்படும் படத்தில் விழாவிற்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வர்த்தகப் பிரமுகர் திரு சுதர்சன் மற்றும் அவரது பார்pயார் திருமதி திவா சுதர்சன் ஆகியோர் மேடையில் கல்லூரி அதிபர் திரு ரவீந்திரன் மற்றும் அவரது பாரியார் ஆகியோரால் கௌரவிக்கப்படுவதைக் காணலாம். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கனடா உதயன் ஆசிரிய பீடம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

பைரவி இசைக் கல்லூரியின் “இசைச்சாரல்-2017” பாடல் போட்டி நிகழ்வில் தாயகப் பாடல்கள் சுற்று சிறப்பாக நடைபெற்றது

பைரவி இசைக் கல்லூரி நடத்திய “இசைச்சாரல்-2017” பாடல் போட்டி நிகழ்வில் தாயகப் பாடல்கள் சுற்று, கடந்த சனிக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது. ஸ்காபுறோவில் உள்ள கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி தாயகப் பாடல்கள் சுற்றுப் போட்டியில் பல பாடக பாடகிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளைக் காட்டினார்கள். சபையில் வர்த்தக நண்பர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், பெற்றோர் ஆகியோர் அமர்ந்திருந்து பாடல்களை இரசித்தனர்

இங்கே காணப்படும் படத்தில் பைரவி இசைக் கல்லூரியின் நிறுவனர் திரு ஜெயச்சந்திரன் மற்றும் போட்டிக்கு மத்தியஸ்த்தர்களாக கலந்து கொண்ட இசைக் கலைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் மகிழ்ச்சியுடன் நிற்பதைக் காணலாம். (படம்:- பைரவி குழுவினர்)