இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

முதல் போட்டியில் ஏற்கனவே ஆஸ்திரேலியா வென்றுள்ளதால் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் இப்போது சமநிலையை எட்டியுள்ளது.

வரும் 19ஆம் தேதி பெங்களூருவில் நடக்கவுள்ள மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, இந்தத் தொடரை யார் கைப்பற்றுகிறார்கள் என்பதை தீர்மானிக்கும்.

31வது ஓவர் வரை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் அதன் பின்னர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியாவுக்காக நிலைத்து நின்று விளையாடி, அதிகபட்ச ரன்கள் எடுத்த ஸ்டீவ் ஸ்மித் 102 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார்.

குல்தீப் யாதவின் பந்து வீச்சில் பௌல்டு அவுட் ஆகி அவர் பெவிலியன் திரும்பினார்.

இந்தியாவுக்காக ஷமி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

ஒரு முனையில் ரோகித் சர்மா நிதானமாக ஆட, மற்றொரு முனையில் ஷிகர் தவன் ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். இந்த ஜோடி 81 ரன்கள் குவித்திருந்த நிலையில் ரோகித் சர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

எம்.எஸ். தோனியின் பெயர் இல்லாத பிசிசிஐ கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியல்
இர்ஃபான் பதான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு: 10 முக்கிய தகவல்கள்
பின்னர் அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி கேப்டன் கோலி, ஷிகர் தவனின் அதிரடி ஆட்டத்திற்கு உறுதுணையாக இருந்தார். சிறப்பாக விளையாடி வந்த ஷிகர் தவன் 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிச்சர்ட்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணியின் ரன் குவிப்பில் சற்று சுணக்கம் ஏற்பட்டது.

பின்னர் கேப்டன் கோலியுடன் கை கோர்த்த கே.எல்.ராகுல், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் கோலியும் சிறப்பாக விளையாட, இந்திய 40 ஓவர்களிலேயே 240 ரன்களை அடைந்தது.

78 ரன்கள் எடுத்திருந்தபோது ஸம்பா பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸம்பா, அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.