இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம்: இடைத்தரகருடன் பேசியதை ஒப்புக்கொண்டார் தினகரன்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷுடன் பேசியதை டிடிவி தினகரன் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கைது செய்துள்ளனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வழக்கு குறித்த விசாரணைக் காக டெல்லி சாணக் யாபுரி குற்றப் பிரிவு காவல் நிலையத் தில் 22-ம் தேதி டிடிவி தினகரன் ஆஜரானார். அவரிடம் 22-ம் தேதி 7 மணி நேரமும், 23-ம் தேதி 10 மணி நேரமும் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தினர். நேற்று 3-வது நாளாக மாலை 4 மணிக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் தினகரன் ஆஜரானார். அவரிடம் நேற்றும் பல மணி நேரம் விசாரணை நடந்தது. டிடிவி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனன், உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரிடமும் 3 நாட்களாக போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணை விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தே தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதலில் சுகேஷ் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறினார். ஆனால், பதிவு செய்யப்பட்ட அவர்கள் இருவரின் செல்போன் உரையாடல் களை ஒலிக்கச் செய்தபோது, சுகேஷிடம் பேசியதை ஒப்புக் கொண் டார். சுகேஷை நீதிபதி என்றுநினைத்து பேசியதாக தெரிவித்துள்ளார்.

கொச்சி, பெங்களூர், டெல்லி ஹோட்டல்களில் இருந்து ஏராளமான கண்காணிப்பு கேமராக்களின் பதிவு களை எடுத்திருக்கிறோம். அவற்றில் தினகரனும், சுகேஷும் சந்தித்து பேசியதற்கான ஆதாரங்கள் கிடைத் துள்ளன. முதலில் அனைத்தையும் பொய் என்று கூறிய தினகரன், ஆதாரங்களுடன் காட்டியபோது அவற்றையும் ஒப்புக் கொண்டார். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது” என்று தெரிவித் தனர்.

தேர்தல் ஆணையத் துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் ஆதா ரங்கள் அனைத்தும் தினகர னுக்கு எதிராக இருப்ப தால் அவரை கைது செய் வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.