“இனிய நந்தவனம்” மாத இதழின் யூலை மாத வெளியீடானது “இளைஞர் சிறப்பிதழ்” ஆக வெளிவந்துள்ளது

தமிழ்நாட்டின் திருச்சி மாநகரிலிருந்து வெளிவரும் “இனிய நந்தவனம்” மாத இதழின் யூலை மாத வெளியீடானது “இளைஞர் சிறப்பிதழ்” ஆக வெளிவந்துள்ளது. மேற்படி இதழின் அட்டையை அலங்கரிப்பவர், கனடா நாட்டில் ரெக்னோ மீடியா என்னும் பெயரில் ஒரு உற்பத்தி நிறுவனத்தை நடத்திவரும் மேற்படி நிறுவனத்தின் அதிபர் திரு மதன் சண்முகராஜா ஆவார்.
உள்ளே இவர் பற்றிய ஒரு விரிவான கட்டுரையை வடித்துள்ளார் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் “இனிய நந்தவனம்” ஆலோசனைக் குழுவில் கனடா நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்பவருமான திரு ஆர். என. லோகேந்திரலிங்கம்.
இன்று தமிழ்நாட்டிலிருந்து “இனிய நந்தவனம்” ஆசிரியர் திரு சந்திரசேகரன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட யூலை மாத இதழ்கள் சிலவற்றை இன்று மாலையே ரெக்னோ மீடியாவின் தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று திரு மதன் அவர்களிடம் கையளித்தார் திரு ஆர் என். லோகேந்திரலிங்கம். அப்போது திரு மதன் அவர்களின் துணைவியார் திருமதி தர்மினி மதன் அவர்களும் கூட இருந்தார்கள்.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்