இந்திய தென் மாநிலங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம்: மோடி அரசு

நாட்டில் தென் மாநிலங்களில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என மோடி அரசு நடந்துவரும் பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில், ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பதில்: தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளது பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்துள்ளது.

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, தங்கள் இயக்கத்தை பரப்ப முயற்சித்து வருகிறது. இதற்காக சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிறது. சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் பலவற்றை இந்தியா தடை செய்துள்ளது.

தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருப்பது தொடர்பான, 17 வழக்குகளை பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு, 122 பேரை கைது செய்துள்ளது.

தென்மாநிலங்கள் தவிர்த்து மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீரிலும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.