இந்தியா டுடே மாநாட்டில் மோடியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!

இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் ரூபாய் மதிப்பு ரத்து நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். மோடி திடீரென வெளியிட்ட ரூபாய் நோட்டு அறிவிப்பு மக்களை பெரும்

சென்னை: இந்தியா டுடே மாநாட்டில் பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் ரூபாய் மதிப்பு ரத்து நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். மோடி திடீரென வெளியிட்ட ரூபாய் நோட்டு அறிவிப்பு மக்களை பெரும் துயரில் தள்ளியதாகவும் அவர் கூறினார். தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் இந்தியா டுடே குழுமத்தின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.