இந்தியாவுக்கு பிறகு பிரிட்டனிலும் ஹிந்து நிதியமைச்சர் படஜெட்டை சமர்பிக்கிறார்

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் அதன் பட்ஜெட்டை மார்ச் 11ல் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ரிஷி சுனாக்(39) தாக்கல் செய்கிறார்.  இந்தியாவுக்கு பிறகு பிரிட்டனிலும் ஹிந்து நிதியமைச்சர் படஜெட்டை சமர்பிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன், தன் அமைச்சரவையில், இந்திய வம்சாளியைச் சேர்ந்தவரும், இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனுமான, ரிஷி சுனாக், பிரிட்டன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

நாராயணமூர்த்தியின் மகளான, அக் ஷதாவை திருமணம் செய்துள்ள ரிஷி, முதல் முறையாக, 2015ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, பிரிட்டன் பார்லிமென்டிற்குள் நுழைந்தார். ‘கன்சர்வேடிவ்’ கட்சியின் முக்கிய தலைவராகவும் உருவெடுத்தார்.

இந்நிலையில், மார்ச் 11ல், பிரிட்டன் பட்ஜெட்டை ரிஷி சுனாக் தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.