இந்தியாவுக்கு எதிராக பேசிய இங்கிலாந்து எம்.பிக்கு இந்திய விசா மறுப்பு

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்முகாஷ்மீர் , லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. மேலும் ஜம்முவின் நிலவரத்தை நேரில் கண்டறிய வெளி நாட்டு எம்பிக்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் இங்கிலாந்து நாட்டின் லேபர் கட்சியை சேர்ந்த எம்.பி., டெபி ஆப்ரகாமும் ஒருவர்

இவர் தற்போது இ -விசா முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளார். இருப்பினும் அவரது விசாவை இந்திய அதிகாரிகள் எவ்வித காரணமும் இன்றி விசாவை மறுத்துள்ளனர். இது குறித்து இந்திய அதிகாரிகள் கூறுகையில் இங்கிலாந்து நாட்டினருக்கு விசா ஆன் அரைவல் முறை வழங்கப்படவில்லை அதன் அடிப்படையில் அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என கூறினர்.

அதே நேரத்தில் மத்திய அரசுக்கு எதிராக இங்கிலாந்து எம்.பி டெபி ஆப்ரகாம் கருத்து கூறி உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தனக்கு விசா மறுக்கப்பட்டது குறித்து அவர்டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:

ஒரு நண்பர் மற்றொரு நண்பரை விமர்சிக்க முடியாது என்பது வெறுப்பாக இருக்கிறது. இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கான அடையாளம் அல்ல என பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடைய விசா வரும் அக்.,5-ம் தேதி செல்லத்தக்கதாக உள்ளது எனவும் பதிவிட்டுள்ளார்.