- தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?
- முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்
- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு விமான சேவை துவக்கம்
இந்தியாவிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
டில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், ‘ ஏர் பிரான்ஸ் நிறுவனம் இம்மாதம் 18 ம் தேதி முதல் ஆக., 1ம் தேதி வரை டில்லி, மும்பை, பெங்களூரு நகரங்களில் இருந்து பாரிஸ்க்கு 28 விமானங்கள் இயக்க உள்ளது. அதே போல் வரும் 17 ம் தேதி முதல் 31ம் தேதி வரை அமெரிக்காவுக்கு 18 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. நியூயார்க் மற்றும் டில்லி இடையே தினசரி ஒரு விமானம் இயக்கப்படும், டில்லி-சான்பிரான்ஸிஸ்கோ இடையே வாரத்திற்கு மூன்று நாளும் விமானங்கள் இயக்கப்படும்
ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு விமானங்களை இயக்குவதற்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுவரை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 6,87,467 இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்’ இவ்வாறு ஹர்தீப்சிங்பூரி கூறினார்.