இந்தியாவின் மூக்கடியில் இலங்கையை முழுங்க பார்க்கிறதா சீனா ?

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்குள் சீனாவின் ஆதிக்கத்தை ஏற்படுத்த விடாது, இலங்கையில் சைவ மதத்தை பின் பற்றும் தமிழர்களின் முழு ஆதரவோடு இந்திய மத்திய அரசு, விரைவாக செயற்பட வேண்டும். இல்லாதுவிட்டால், இலங்கையில் பெரும்பான்மையாக இருக்கும் பெளத்த மதத்தை, சீனா தன் கைக்குள் வைத்து கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் தென் பிராந்திய கடல் எல்லையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது !!

இந்தியாவில், பின் பற்றும் பெளத்தமும் மற்றும் இலங்கையில் பின் பற்றும் பெளத்தமும் ஒன்றல்ல. இலங்கையில் பின் பற்றும் பெளத்த கொள்கைகள் எல்லாமே, இந்திய – சீனப் போரில் சீனாவிற்கு இலங்கை உதவி செய்த பிறகு, சீனாவின் பெளத்த கொள்கைகளை இன்றுவரை 100% பின் பற்றி வருகின்றார்கள் !

ஆனால், இந்தியாவில் இந்து மதத்தினர் வணங்கும் கடவுள்களும், மற்றும் இலங்கையின் ஆதிக் குடிகளான தமிழ் சைவர்கள் வணங்கும் கடவுள்களான சிவன், விஷ்ணு, பார்வதி, கணபதி, முருகன், ராமர், ஆஞ்சிநேயர் என்று பல கடவுள்களும் ஒன்றாகும்.

ஆனால், இலங்கையில் பல சைவக் கோயில்களை இடித்து, அதற்குப் பக்கத்தில் புதிதாக பல பெளத்த கோயில்களை, இலங்கையின் பெளத்த அரசின் உதவியோடு, பிரமாண்டமாக அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் பெளத்தவாதிகள் !

தற்பொழுது, சிறிலங்கா தொல்பொருள் திணைக்களத்தின் செயலணியின் 45 பேரில், அனைவரும் பெளத்த சிங்களவர். கிழக்கு மாகாண தொல்பொருள் திணைக்களத்தின் செயலணியின் 11 பேரில் அனைவரும் பெளத்த சிங்களவர். அதிலும், சொந்த நாட்டு மக்களை கொலை செய்த முன்னாள் படை அதிகாரிகள் !

இதுவொரு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் இன்னொரு வடிவம் !! இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் என 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை கோட்டாபய ராஜபக்ஸே, தற்பொழுது அறிவித்து இருக்கிறார். இந்த ஜனாதிபதி செயலணிக்கு பௌத்த மதம் சார்ந்த பிக்குகள், இராணுவ அதிகாரி, மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளடங்கலாக 11 பேர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் !

1. எல்லவால மேதானந்தா தேரர் .
2. பனமுரே திலகவன்ஷா தேரர் : வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான பிரதான மத குரு.
3. மேஜர் ஜெனரல் (ஓய்வு ) கமல் குணரத்ன : பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.
4. டாக்டர் சேனரத் பண்டாரா திசாநாயக்க: தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர்.
5. செல்வி சந்திரா ஹெரத் : காணி ஆணையாளர்.
6. செல்வி A.L.S.C. பெரேரா: பிரதம நில அளவையாளர்.
7. பேராசிரியர் ராஜ்குமார் சோமதேவா: சிரேஷ்ட விரிவுரையாளர், களனி பல்கலை கழகம்.
8. பேராசிரியர் கபில குணவர்தன: மருத்துவ பீடம் , பேராதெனிய பல்கலை கழகம்.
9. தேசபண்டு தென்னகூன் : சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்.
10. H.E.M.W.G. திசனாநாயக்க: கிழக்கு மாகாண காணி ஆணையாளர்
11. திலித் ஜெயவீரா: பணிப்பாளர், Derana ஊடக வலையமைப்பு.

இந்த ஜனாதிபதி செயலணியில், கிழக்கு மாகாணத்தை வாழ்விடமாக கொண்ட துறைசார்ந்த தமிழ் பேசும் சிறுபான்மை சமூகம் சார்ந்த நிபுணர்கள், முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள் !

மறுபுறம், இனவாதம் பேசி வரும் பெளத்த பிக்குகள் மற்றும் இராணுவ பொலிஸ் அதிகாரிகளை நியமனம் செய்து இருக்கிறார்கள் !

இதன்மூலம், தமிழ் பேசும் மக்களின் வரலாற்று தாயகமான கிழக்கு மாகாணத்தை, முற்றுமுழுதாக கபளீகரம் செய்யும் திட்டத்தை, ராஜபக்சே நிர்வாகம் தொடங்கி இருக்கிறது !! சிலவேளை, இலங்கைக்கு இந்தியா ஏதேனும் அழுத்தத்தை கொடுத்தால், அவர்கள் சொல்வார்கள் தாங்கள் கிழக்கு மாகாணத்தில், உள்ள இஸ்லாமிய மதத்தினரை கட்டுப்படுத்துவதற்கெடுத்த முயற்சியென்று சொல்வார்கள்.

அப்படி, இஸ்லாமியர்களை கட்டுப் படுத்த முயற்சி எடுப்பவர்கள். எதற்காக, அந்த நிலத்தின் பூர்வ குடிகளான சைவர்களை புறக்கணித்து, தனி பெளத்தர்களை வைத்து தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்தும் குழுவை அமைத்துள்ளார்கள் ??

இவற்றையெல்லாம் பார்க்கும் போது, குறைந்தபட்சம் வருடம் 1987இல், இந்தியா இலங்கையோடு போட்ட ராஜீவ் – ஜேஆர் ஒப்பந்தத்தை, திரும்ப மீள் பரிசீலனை செய்து, இலங்கையின் வடக்கு கிழக்கை ஒன்றாக இணைத்து, இலங்கையின் பூர்வக் குடிகளான சைவத் தமிழரின் கையில் கொடுத்தால் மட்டுமே, இந்து சமுத்திரத்தின் தென் கோடியில், சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.