- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்தில் தேவை இல்லாமல் மூக்கை நீட்டிய மலேசிய பிரதமர் மகாதீர் திடீர் ராஜினாமா
இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்திலும் தேவை இல்லாமல் மூக்கை நீட்டி, கருத்து தெரிவித்த மலேசிய பிரதமர் மகாதீர், அந்நாட்டில் கூட்டணி தர்மத்தை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால் பதவியை ராஜினாமா செய்தார்.
94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத், உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றவர். கடந்த, 2018ல் மலேசியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது உலகமே இவரை பாராட்டியது.
மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் கட்சியை சேர்ந்த மகாதீருக்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி கிடைக்கவில்லை. பீப்பிள் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவரான அன்வர் இப்ராஹிமுடன் இணைந்து வெற்றி பெற்றார்.’இந்த ஆண்டு ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டை, மலேசியா ஏற்று நடத்துகிறது. நவ., மாதத்தில் நடைபெறும் இந்த மாநாட்டுக்குப் பிறகு, அன்வார் இப்ராஹிம், பிரதமர் பதவியை ஏற்பார்’ என, மகாதீர் முகம்மது குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவற்றில் மகாதீர் மூக்கை நுழைத்தார். அவரது கருத்துகள் பெரும் கண்டனங்களுக்கு உள்ளாகின. இதனால் கூட்டணிக் கட்சிகளுக்குள், பிரச்னைகள் ஏற்பட்டன. மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது.இதனால், மகாதீரை அன்வர் விமர்சித்தார். அதில் கோபமடைந்த மகாதீர், கடுமையான வார்த்தைகளில் அன்வரை விமர்சித்தார்.
இந்த நிலையில், நேற்று மகாதீர் கட்சியைச் சேர்ந்த சிலர், முன்னாள் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடந்தினர். அன்வர் கட்சியைச் சேர்ந்த சிலரும் முன்னாள் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்தனர்.இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த, அன்வர் இப்ராஹிம், ”மகாதீர் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் எங்களுக்குக் கொடுத்த சத்தியத்தை மீறிவிட்டார். ஆட்சிக்கு வந்து சில வருடங்களில் என்னிடம் பொறுப்பை கொடுப்பேன் எனக் கூறினார். ஆனால் மகாதீர் அதை செய்யவில்லை,” எனத் தெரிவித்தார்.
இது மலேசியாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.’மகாதீர் மொஹமத் சத்தியத்தை மீறிவிட்டார்’ என, அன்வர் புகார் தெரிவித்த சில மணி நேரங்களில், மகாதீர் மொஹமத் தனது பதவி விலகல் கடிதத்தை, அந்நாட்டு மன்னரிடம் அளித்திருக்கிறார்.இதனால் அங்கு அன்வர் பிரதமர் ஆவாரா அல்லது அங்கு மீண்டும் தேர்தல் நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.