‘இந்தியாவிடம் சீனா ஜிங்பிங் படுதோல்வி !!

சீனாவின் திட்டம்பி.ஆர்.ஐ., எனப்படும், ‘பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேடிவ்’ திட்டத்தின் மூலம், பல நாடுகளை சாலை மற்றும் கடல் மார்க்கத்தில் இணைக்க, சீனா முயற்சித்து வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்தோடு, தெற்காசிய நாடுகளுக்கான துாதர்களை, சீனா நியமித்து வருகிறது.சீனாவைச் சேர்ந்த, யு.எப்.டபிள்யூ.டி., எனப்படும் ஐக்கிய முன்னணி பணித் துறை, மற்ற நாடுகளில் அரசியல், பொருளாதாரம் உள்ளிட்டவை மூலம், சீனா உள்ளே நுழைவதற்கான வழிமுறைகளை வகுத்து தரும். அதன்பின், அங்கு தன் ஆக்கிரமிப்பு, ஆதிக்கத்தை சீனா மேற்கொள்ளும்.சீன அதிபர், ஷீ ஜிங்பிங் இந்தத் துறையில் பணியாற்றியவர். தற்போது, பாகிஸ்தானின் புதிய துாதராக, இந்தத் துறையில் பணியாற்றிய, நாங்க் ரோங்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேச துாதர், இலங்கைக்கான முன்னாள் துாதர் ஆகியோரும் இந்தத் துறையில் பணியாற்றியவர்களே. நேபாளத் துாதராக உள்ள ஹூவா யோங்கி, சீன ராணுவத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். நேபாளத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, இந்தியாவைத் தவிர, தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளில், தனக்கு இணக்கமானவர்களை துாதராக நியமித்து உள்ளார் ஜிங்பிங். இதற்கு முக்கிய காரணம், பி.ஆர்.ஐ., திட்டத்தை செயல்படுத்துவதே.

‘இந்தியாவுக்கு எதிராக, தன் ராணுவம் மூலம் சீன அதிபர், ஷீ ஜிங்பிங் எடுத்த முயற்சிகள், படுதோல்வி அடைந்துள்ளன. இது அவர் எதிர்பாராதது.’அதனால், இந்தியா மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த அவர் முயற்சிக்கும் அபாயம் உள்ளது’ என, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. இது குறித்து, அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘நியூஸ்வீக்’ என்ற இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவுக்கு எதிராக, சீன ராணுவத்தின் சமீபத்திய மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை வடிவமைத்தது, அந்த நாட்டின் அதிபர், ஷீ ஜிங்பிங்தான்.

ஆனால், சீனப் படைகளை முன்னேற விடாமல் இந்தியப் படைகள் மிகச் சிறப்பாக செயல் பட்டன. உண்மையில் இந்த மோதலில், சீனப் படைகளின் மோசமான நிலை வெளிப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியப் படைகளின் செயல்பாடுகள் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கடந்த, ஜூன், 15ல்uநடந்த மோதலில், இந்திய படைகளைச் சேர்ந்த, 20 பேர் உயிரிழந்தனர். ஆனால், தன் தரப்பு சேதம் குறித்து சீனா எதையும் உறுதியாக கூறவில்லை. அந்த மோதலில், சீனப் படையைச் சேர்ந்த, 43 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த அளவுக்கு சேதம் ஏற்படும் என்று, சீனா எதிர்பார்க்கவில்லை.

சீனப் படைகள் ஆக்கிரமித்திருந்த பகுதிகளையும் இந்தியப் படைகள் மீண்டும் கைப்பற்றி உள்ளன. கடந்த சில மாதங்களாக நடந்து வரும் இந்த நடவடிக்கைகளில், சீனப் படைகளுக்கு ஒரு சிறிய வாய்ப்பை கூட இந்தியப் படைகள் அளிக்கவில்லை.நாட்டின் அதிபராகவும், சீன ராணுவத்தின் தலைவராகவும் உள்ள ஜிங்பிங்குக்கு இது படு தோல்வியாகும்.அதனால், அவருடைய கோபம் அதிகரித்திருக்கும். அதில் இருந்து தப்பிக்க, தற்போது நடந்ததைவிட மிகப் பெரிய தாக்குதலில் ஈடுபட வேண்டிய கட்டாயம், சீன ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், மாற்று திட்டங்களுடன், இந்தியாவுக்கு எதிராக பெரிய தாக்குதலை நடத்த, ஜிங்பிங் உத்தர விடும் அபாயம் உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.