- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள இவிபி படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாயினர்.
இந்நிலையில் படத்தின் இணை இயக்குனர் குமார் நசரேத் பேட்டை காவல் நிலையத்தில் லைகா நிறுவனத்தின் மீது புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: லைகா நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்துதரப்படவில்லை, கிரேன் உரிமையாளர் அஜாக்கிரதையாக இருந்துள்ளார். என புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கிரேன் உரிமையாளர், புரொடொக்சன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.