- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

இத்தாலி வெளியிட்ட வீடியோ – எப்படி பரவுகிறது கொரோனா வைரஸ் ?
உலகில் உள்ள 162 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ் தொற்று இதுவரை 1,82,725 பேருக்கு பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. இத்தாலியில் மட்டும் இதுவரை 2158 பேர் உயிரிழந்துள்ளனர். 23073 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இத்தாலி முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் எவ்வாறு மனிதர்களிடம் பரவுகிறது என்பது குறித்து இத்தாலி அரசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று உள்ளவருக்கு எந்தவித பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் சிகிச்சை அளிக்கும் போது மருத்துவ பணியாளர்களுக்கும், நோயாளியை தொடும் உறவினர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது. அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தும்போது அதன்மூலமும் கொரோனா பரவுகிறது என்பது அந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது. இதற்கு ஒரே பாதுகாப்பான வழி கைகளை சுத்தமாக கழுவதும், நோயாளிகளை அணுகும்போது உரிய பாதுகாப்பு கவசங்களை உபயோகப்படுத்த வேண்டும் என்பதை அந்த வீடியோ தெரியப்படுத்துகிறது.
